வினேஷ் போகத் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு – இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா?

By Rsiva kumar  |  First Published Aug 10, 2024, 7:37 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் எலிமினேஷ் சுற்று போட்டி முதல் காலிறுதிப், அரையிறுதி என்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதன் மூலமாக மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். இதன் மூலமாக இந்தியாவிறு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இளம் இந்திய வீரர் அமன் செராவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tap to resize

Latest Videos

ஆனால், அவர் 50 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடை இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முதல் நாள் இரவே 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது தெரிய வர, அவருக்கு தீவிர உற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரால் 100 கிராம் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த நாளே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஓய்வு அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் தான் தகுதி நீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தார்.

காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா – தங்கப் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா!

அந்த மனு மீதான விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில், வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!