மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா தோல்வி அடைந்து வெளியேறினார். இதனால், இந்திய அணியின் பதக்க வாய்ப்பும் பறிபோனது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 15ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தியா கோல்ஃப் மற்றும் மல்யுத்தம் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், கோல்ஃப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா எலிமினேஷ சுற்று எனப்படும் 16ஆவது சுற்று போட்டியில் விளையாடினார்.
இதில், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெர்னாடெட் நாகியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் ரீத்திகா 12-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐபெரி மெடெட் கைஸியை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் 1-1 என்று சமன் செய்தனர்.
Olympic Gold Medal Price: பாரிஸ் 2024 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் தான் ஐபெரி உலகக் சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் நின்ற நிலையில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் இந்தியா தங்கம் வென்று பதப்பட்டியலில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டியில் தோல்வி தோல்வி அடைந்தார். எனினும் அவர் 2ஆவது வாய்ப்பு போட்டியில் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இடம் பெற்று விளையாட இருக்கிறார்.