பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் தொடரின் போட்டிகள் தொடங்கி இன்றுடன் 15 நாட்கள் ஆன நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.
பாரிஸ் 2024 ஒலிபிக்ஸ் (Paris 2024 Olympics) தொடரில் போட்டிகள் தொடங்கி இன்றுடன் 15 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் இந்தியா 5 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று 6 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 67ஆவது இடத்தில் உள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா 7 பதக்கங்களை வென்று 48ஆவது இடத்தில் இருந்தது.
ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இதுவரையில் 6 பதக்கம் மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. மேலும் ஒரு தங்கப் பதக்கம் கூட கைப்பற்றவில்லை. இதுவரையில் இந்தியா விளையாடிய தடகளம், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ரோவிங், ஜூடோ, பேட்மிண்டன், வில்வித்தை, குதிரையேற்றம் ஆகிய விளையாட்டுகளில் பதக்கம் இல்லாமல் வெளியேறியது.
இந்த நிலையில் தான் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இன்று மல்யுத்தம், கோல்ஃப் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரின் 15ஆவது நாளான ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
பிற்பகல் 12.30 மணி – கோல்ஃப் - மகளிருக்கான தனிநபர் ஸ்டிரோக் சுற்று 4
அதிதி அசோக் மற்றும் தீக்ஷா டாகர்
பிற்பகல் 2.51 மணி – மல்யுத்தம் – மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 76 கிலோ சுற்று 16
ரீத்திகா ஹூடா – பெர்னாடெட் நாகி (ஹங்கேரி)
மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த அமன் செராவத் புதிய சாதனை!
மாலை 4.20 மணி – மல்யுத்தம் - மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 76 கிலோ காலிறுதிப் போட்டி
ரீத்திகா ஹூடா – சுற்று 16ல் வெற்றி பெற்றால் மட்டும்
இரவு 10.25 மணி - மல்யுத்தம் - மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 76 கிலோ அரையிறுதிப் போட்டி – காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும்
வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கொடுத்திருக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!