Paris Olympics 2024 India Schedule – இந்தியா விளையாடும் போட்டிகள் அட்டவணை 2ஆவது நாள்!

By Rsiva kumar  |  First Published Jul 27, 2024, 10:32 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் முதல் நாளில் சீனா 2 தங்கம் வென்று பதக்க பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இந்தியா இதுவரையில் பதக்க வேட்டையை தொடங்கவில்லை. துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று மழைக்கு நடுவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இந்திய வீரர்களான பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் இந்திய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் – இந்தியா பவுண்டரி மழை பொழிந்து 213 ரன்கள் குவிப்பு!

Tap to resize

Latest Videos

முதல் நாளில் துப்பாக்கி சுடுதல், ரோவிங் (துடுப்பு படகு), டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் 4ஆவது இடம் பிடித்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். எனினும், அவருக்கு நாளை ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரமீதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பபுதா ஜோடி 6ஆவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவன் மற்றும் சஞ்சீவ் சிங் ஜோடியானது 12ஆவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

டிக்கெட் விற்பனையில் புதிய சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக் – ஒரு கோடியில் 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

இதையடுத்து ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பாக சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூ சிங் சீமா இருவரும் பங்கேற்றனர். இதில் தகுதிச் சுற்று போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இதில் சரப்ஜோத் சிங் 577 புள்ளிகளுடன் 9ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

இதே போன்று அர்ஜூன் சிங் சீமா 574 புள்ளிகளுடன் 18ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் இருவரும் களமிறங்கினர். இதில், சங்வான் 573 புள்ளிகளுடன் 15ஆவது இடம் பிடித்து வெளியேறினார். ஆனால், ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வந்த மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கான பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைப்பார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

Paris 2024:10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – இந்தியாவிற்கு பதக்கம் உறுதி

நாளை ஜூலை 28 ஆம் தேதி இந்தியா விளையாடும் போட்டிகள் அட்டவணை:

துப்பாக்கி சுடுதல்: மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் தகுதி சுற்று போட்டி

இளவேனில் வளரிவான், ரமீதா ஜிண்டால் – பிற்பகல் 12.45 மணி

பேட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் பிரிவு குரூப் பிளே ஸ்டேஜ்

இந்தியா vs மாலத்தீவு, பிவி சிந்து vs பாத்திமத் நபாஹா அப்துல் ரஸ்ஸாக்

பிற்பகல் – 12.50 மணி

டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவு

இந்தியா vs ஸ்வீடன்; ஸ்ரீஜா அகுலா vs கிறிஸ்டியானா கால்பெர்க்

துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் தகுதி சுற்று போட்டி

அர்ஜூன் பபுதா, சந்தீப் சிங் – பிற்பகல் 2.45 மணி

நீச்சல்: ஆண்களுக்கான 100 மீ பேக்ஸ்ட்ரோக், ஹீட்ஸ்

இந்தியா – ஸ்ரீஹரி நடராஜ் – பிற்பகல் 2.30 மணி

நீச்சல்: மகளிருக்கான 200 மீ ஃப்ரீஸ்டைல், ஹீட்ஸ்

இந்தியா – திநிதி தேசிங்கு – பிற்பகல் 2.30 மணி

டேபிள் டென்னிஸ்: ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு

இந்தியா vs ஸ்லோவெனியா; சரத் கமல் அஜந்தா vs டெனி கோஜூல் – பிற்பகல் 3 மணி

டென்னிஸ்: ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று

இந்தியா – சுமித் நாகல் – பிற்பகல் 3.30 மணி

குத்துச்சண்டை: மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு முதல்நிலை சுற்று

இந்தியா vs ஜெர்மனி;  ஜரீன் நிகாத் vs மேக்ஸி கரீனா க்ளோட்சர்

பிற்பகல் 3.50 மணி

டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவு

இந்தியா vs இங்கிலாந்து; மணிகா பத்ரா vs அன்னா ஹர்ஸி

மாலை – 4.30 மணி

வில்விதை: மகளிர் அணி, காலிறுதி

மாலை – 5.45 மணி

பேட்மிண்டன்: ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு

இந்தியா vs ஜெர்மனி; ஹெச் எஸ் பிரணாய் vs பாபியன் ரோத்

இரவு – 8.00 மணி

டேபிள் டென்னிஸ்: ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு

இந்தியா vs பிரான்ஸ்; ஹர்மீத் தேசாய் vs ஃபெலிக்ஸ் லெப்ரான்

இரவு – 11.30 மணி

click me!