பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸின் 9ஆவது நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தடகளம், ஹாக்கி, கோல்ஃப் போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் முடிவில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. பதக்க பட்டியலில் இந்தியா 47ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. 8 ஆவது நாளான நேற்று வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இதே போன்று துப்பாக்கி சுடுதல் 25மீ ஏர் பிஸ்டல் இறுதி போட்டியில் மனு பாக்கர் 4ஆவது இடம் பிடித்து வெளியேறினார். மேலும், ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் தான் 9ஆவது நாளான இன்று இந்தியா ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், படகுப் போட்டி ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
பிற்பகல் 12.30 மணி – கோல்ஃப்
ஆண்களுக்கான தனிநபர் ஸ்டிரோக் சுற்று 4 - சுபாங்கர் சர்மா மற்றும் ககன்ஜீத் புல்லர்
பிற்பகல் 12.30 மணி – துப்பாக்கி சுடுதல்
ஆண்களுக்கான 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஸ்டேஜ் 1 - விஜய்வீர் சித்து மற்றும் அனிஷ்
பிற்பகல் 1 மணி: துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான ஸ்கீட் தகுதிச் சுற்று நாள் 2 – மகேஷ்வரி சவுகான் மற்றும் ரைசா தில்லான்
பிற்பகல் 1.30 மணி: ஹாக்கி
ஆண்களுக்கான காலிறுதிப் போட்டி - இந்தியா – இங்கிலாந்து
முகமது சிராஜ் மற்றும் நிகத் ஜரீனுக்கு டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி வழங்கும் மசோதா நிறைவேற்றம்!
பிற்பகல் 1.35 மணி: தடகளம்
மகளிருக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று - பருல் சவுத்ரி
பிற்பகல் 2.30 மணி: தடகளம்
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று - ஜெஸ்வின் ஆல்ட்ரின்
பிற்பகல் 3.02 மணி: குத்துச்சண்டை
மகளிருக்கான 75கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டி - லோவ்லினா போர்ஹகைன் – லி குயான் (சீனா)
பிற்பகல் 3.30 மணி: பேட்மிண்டன்
ஆண்களுக்கான தனிநபர் அரையிறுதிப் போட்டி- லக்ஷயா சென் – விக்டர் அக்சல்சென்
பிற்பகல் 3.35 மணி: படகுப் போட்டி
ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 7 மற்றும் 8 – விஷ்ணு சரவணன்
மாலை 4.30 மணி – துப்பாக்கி சுடுதல்
ஆண்களுக்கான 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஸ்டேஜ் 2 - விஜய்வீர் சித்து மற்றும் அனிஷ்
மாலை 6.05 மணி: படகு போட்டி
மகளிருக்கான டிங்கி ரேஸ் 7 மற்றும் 8 – நேத்ரா குமணன்
இரவு 7 மணி: துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான ஸ்கீட் இறுதிப் போட்டி (தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் மட்டும்) – மகேஷ்வரி சவுகான் மற்றும் ரைசா தில்லான்