துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா தோல்வி – மகேஷ்வரி 8ஆவது இடம், ரைசா 25ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Aug 3, 2024, 10:16 PM IST

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் 2024 தொடரின் 8ஆவது நாள் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, படகு போட்டி, கோல்ஃப் போட்டிகள் நடத்தப்பட்டன. துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதே போன்று வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் தான் இன்று பிற்பகல் ஆண்களுக்கான 2ஆவது நாள் ஸ்கீட் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.

முகமது சிராஜ் மற்றும் நிகத் ஜரீனுக்கு டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி வழங்கும் மசோதா நிறைவேற்றம்!

Latest Videos

undefined

இதில், இந்தியா சார்பில் அனந்த்ஜீத் சிங் நருகா போட்டியிட்டார். இதில், அவர், 116 புள்ளிகள் பெற்று 24ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முதல் 6 இடங்களை பிடித்திருக்க வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த சிஎல் பிரின்ஸ் 124 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் நருகா 6 புள்ளிகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

கடைசியாக தீபிகா குமாரியும் தோல்வி – ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறிய 6 வில்வித்தை வீரர், வீராங்கனைகள்!

இதே போன்று முதல் நாளுக்கான மகளிருக்கான ஸ்கீட் தகுதிச் சுற்று போட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் இந்தியா சாரில் மகேஷ்வரி சவுகான் மற்றும் ரைசா தில்லான் இருவரும் போட்டியிட்டனர். இதில் மகேஷ்வரி 71 புள்ளிகள் பெற்று 8ஆவது இடம் பிடித்தார். இதே போன்று ரைசா தில்லான் 66 புள்ளிகள் பெற்று 25ஆவது இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து 2ஆவது நாள் போட்டி நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருக்கிறது.

ஹாட்ரிக் பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர் - மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 4ஆவது இடம்!

click me!