ஹாக்கி, மல்யுத்தம், ஈட்டி எறிதலில் பதக்கம் கிடைக்க வாய்ப்பு – நீரஜ் சோப்ரா விளையாடும் போட்டி எப்போது?

By Rsiva kumar  |  First Published Aug 8, 2024, 11:15 AM IST

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 13 ஆவது நாளான இன்று இந்தியா ஹாக்கி, மல்யுத்தம், கோல்ஃப், தடகளம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது.


கடந்த ஜூலை 26 ஆம் தேதி பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் நீச்சல், ஹாக்கி, கோல்ஃப், தடகளம், வில்வித்தை, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, மல்யுத்தம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை என்று 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்று வருகிறது.

Vinesh Phogat: ஷாக்கிங் நியூஸ்! மல்யுத்தத்திற்கு குட் பை!ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்! ரசிகர்கள் அதிர்ச்சி!

Latest Videos

undefined

ஆனால், வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, நீச்சல், டென்னிஸ், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ் என்று 11 விளையாட்டுகளில் இந்தியா பதக்கமே இல்லாமல் வெளியேறியுள்ளது. இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. கடைசியாக மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு கிடைக்க இருந்த தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கைநழுவிப் போனது. ஆம், இந்த போட்டியில் இந்தியா சார்பில் இறுதிப் போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் கூடுதல் உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: தலை நிமிர்ந்து நடங்கள்; ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு ஆதரவாக நயன்தாரா போட்ட பதிவு

இது ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூடுதல் எடையை குறைக்க முடியை வெட்டுதல், சைக்கிளிங், ஸ்கிப்பிங், ஜாக்கிங், ரத்தத்தை வெளியேற்றுதல் என்று பல வழிகளிலும் முயற்சித்துள்ளனர். எனினும் கடைசியில் தகுதி நீக்கமே ஜெயித்தது. கடுமையான பயிற்சி காரணமாக நீர்ச்சத்து ஏற்பட்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:  Paris 2024 Olympics:வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு, கார் கலெக்‌ஷன், வீடுகள், கணவர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த நிலையில் தான் இன்று காலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மல்யுத்தத்திற்கு குட் பை சொன்னார். ஆம், மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது. என்னிடம் துணிச்சல் இல்லை. வலிமையும் இப்போது இல்லை. 2001-2024 மல்யுத்தத்திற்கு குட் பை என்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதில் என்ன வேதனை என்றால் 2016 ஒலிம்பிக்ஸ், 2020 ஒலிம்பிக்ஸ் மற்றும் 2024 ஒலிம்பிக்ஸ் என்று ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை என்பது தான். எது எப்படியோ ஒட்டு மொத்த இந்தியாவும் அவருக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறது.

Paris 2024: இது வினேஷ் போகத்திற்குரிய பதக்கம் - மல்யுத்தத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்ற சாரா ஹில்டெப்ராண்ட்

இந்த நிலையில் தான் 13ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியா கோல்ஃப், தடகளம், மல்யுத்தம், ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்கிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பிற்பகல் 12.30 மணி – கோல்ஃப் – மகளிருக்கான தனிநபர் ஸ்டிரோக் சுற்று 2

அதிதி அசோக் மற்றும் தீக்‌ஷா டாகர்

பிற்பகல் 2.05 மணி - தடகளம் – மகளிருக்கான 100மீ தடை தாண்டுதல் 2ஆவது வாய்ப்பு

ஜோதி யார்ராஜி

பிற்பகல் 2.30 மணி – மல்யுத்தம் – ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு சுற்று 16

அமன் செஹ்ராவத் – விளாடிமிர் எகோரோவ் (வடக்கு மாசிடோனியா)

பிற்பகல் 2.30 மணி – மல்யுத்தம் – மகளிருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப்பிரிவு சுற்று 16

அன்ஷூ மாலிக் – ஹெலன் லூயிஸ் மரூலிஸ்

மாலை 4.20 மணி – மல்யுத்தம் - ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதிப் போட்டி (தகுதி பெற்றால் மட்டும்)

அமன் செஹ்ராவத்

மாலை 4.20 மணி – மல்யுத்தம் - மகளிருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதிப் போட்டி (தகுதி பெற்றால் மட்டும்)

மாலை 5.30 மணி – ஹாக்கி – வெண்கலப் பதக்க போட்டி

இந்தியா – ஸ்பெயின்

இரவு 9.45 மணி – மல்யுத்தம் - ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதிப் போட்டி (காலிறுதியில் தகுதி பெற்றால் மட்டும்)

இரவு 10.25 மணி – மல்யுத்தம் – பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதிப் போட்டி (காலிறுதியில் தகுதி பெற்றால் மட்டும்)

இரவு 11.55 மணி – தடகளம் – ஈட்டி எறிதல், இறுதிப் போட்டி

நீரஜ் சோப்ரா

click me!