Vinesh Phogat: ஷாக்கிங் நியூஸ்! மல்யுத்தத்திற்கு குட் பை!ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்! ரசிகர்கள் அதிர்ச்சி!

By vinoth kumar  |  First Published Aug 8, 2024, 7:39 AM IST

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 


மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாரிஸில் 33வது ஒலிம்பிக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது. ஆனால்  தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை. இந்நிலையில், மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில்  வினேஷ் போகத்  இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: தலை நிமிர்ந்து நடங்கள்; ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு ஆதரவாக நயன்தாரா போட்ட பதிவு

ஆனால், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி இறுதிப்போட்டிக்கு முன்பு அவரை தகுதிநீக்கம் செய்வதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இந்த அறிவிப்பு பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்லையில், இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது  இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க:  Paris 2024 Olympics:வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு, கார் கலெக்‌ஷன், வீடுகள், கணவர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இது குறித்து வினேஷ் போகத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:  மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய துணிச்சல் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

click me!