பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 11 நாட்கள் முடிந்த நிலையில் நாளை 12ஆவது நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவிற்கு 2 பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரானது கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் உற்சாகமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், படகுப் போட்டி, நீச்சல், டென்னிஸ், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஜூடோ, ஹாக்கி, பளுதூக்குதல், குதிரையேற்றம், கோல்ஃப், ரோவிங் என்று 16 விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது.
undefined
இதுவரையில் நடைபெற்று முடிந்த நீச்சல், டென்னிஸ், குதிரையேற்றம், ரோவிங், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்தியா மொத்தமாக 3 பதக்கம் மட்டுமே வென்று தற்போது பதக்கப் பட்டியலில் 60ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. அந்த 3 வெண்கலப் பதக்கங்களை இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் கைப்பற்றியது.
இந்த நிலையில் தான் 12ஆவது நாளான நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியா தடகளம், கோல்ஃப், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பளுதூக்குதல் என்று பல போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே போன்று மராத்தான் போட்டியிலும் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முதல் முயற்சியிலேயே கிடைத்த வெற்றி – 89.34மீ தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி!
நாளை 12 ஆவது நாள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியா விளையாடும் போட்டிகள்:
காலை 11 மணி – தடகளம்: மராத்தான் ரேஸ் வாக்கிங் கலப்பு இரட்டையர்
பிரியங்கா கோஸ்வாமி மற்றும் சூரஜ் பன்வார்.
பிற்பகல் 12.30 மணி – மகளிருக்கான தனிநபர் பிரிவு சுற்று 1
அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர்.
பிற்பகல் 1:30 மணி - டேபிள் டென்னிஸ் - மகளிருக்கான அணி (மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத்)
காலிறுதிப் போட்டி: இந்தியா vs ஜெர்மனி
பிற்பகல் 1.35 மணி: தடகளம் -ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச் சுற்று – சர்வேஷ் குஷாரே
பிற்பகல் 1.55 மணி - தடகளம் - மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று - குரூப் ஏ - அண்ணு ராணி
பிற்பகல் 2.09 மணி – தடகளம் – மகளிருக்கான 100மீ தடை தாண்டும் ஓட்டம் 1 ஹீட் – ஜோதி யார்ராஜி
பிற்பகல் 3 மணி – மல்யுத்தம் – மகளிருக்கான 50கிலோ ஃப்ரீஸ்டைல் சுற்று 32 – ஆன்டிம் பங்கல்
மாலை 4.20 மணி – மல்யுத்தம் – மகளிருக்கான 53கி ஃப்ரீஸ்டைல் சுற்று 16 (தகுதி பெற்றால்) - ஆன்டிம் பங்கால்
இரவு 10:25 மணி - மல்யுத்தம் - பெண்கள் 53கி ஃப்ரீஸ்டைல் - அரையிறுதி (தகுதி பெற்றால்) - ஆன்டிம் பங்கால்
இரவு 10:45 மணி - தடகளம் - ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் தகுதிச் சுற்று - அப்துல்லா அபூபக்கர், பிரவீன் சித்திரவேல்
இரவு 11 மணி – பளுதூக்குதல் – மகளிருக்கான 49கி ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் சுற்று – சாய்கோம் மீராபாய் சானு
நள்ளிரவு 12.20 மணி -மல்யுத்தம் - மகளிருக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் வெண்கலப் பதக்கப் போட்டி (தகுதி பெற்றால்) - வினேஷ் போகத்
நள்ளிரவு 12:45 மணி - மல்யுத்தம் - மகளிருக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் - தங்கப் பதக்கப் போட்டி (தகுதி பெற்றால்) - வினேஷ் போகட்