மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் உறுதி – அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்!

By Rsiva kumarFirst Published Aug 6, 2024, 7:08 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 11ஆவது நாளான இன்று நடைபெற்ற மல்யுத்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் 11ஆவது நாள் போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் கிஷோர் ஜெனா தகுதிச் சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதே போன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்று போட்டியில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முதல் முயற்சியிலேயே கிடைத்த வெற்றி – 89.34மீ தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி!

Latest Videos

இதே போன்று இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மகளிருக்கான மல்யுத்தம் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ 16ஆவது சுற்று போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் வினேஷ் போகத் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு சென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு புள்ளி கூட இழக்காமல் யுய் சுசாகி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மல்யுத்தம் போட்டியில் விளையாடி வரும் சுசாகி இதுவரையில் 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் 9ஆவது இடம் பிடித்த கிஷோர் ஜெனா!

மாலை 4.20 மணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்ஸானா வாசிலிவ்னா லிவாச்சை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் வினேஷ் போகத் சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் கியூபா நாட்டைச் சேர்ந்த யூஸ்னிலிஸ் குஸ்மான்னை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் கியூபா தடுமாறினாலும், அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான் வீராங்கனை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்து வெளியேறினார். இதன் மூலமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

3000மீ ஸ்டீபிள்சேஸ் ஹீட்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக அவினாஷ் சேபிள் சாதனை!

இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் வினேஷ் போகத் கியூபா நாட்டைச் சேர்ந்த யூஸ்னிலிஸ் குஸ்மானை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார். ஒருவேளை தோல்வி அடைந்தால் 2ஆவது வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தால் வெண்கலப் பதக்கம் கிடைக்கும். மாறாக, வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றால் தங்கப் பதக்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!