முதல் முயற்சியிலேயே கிடைத்த வெற்றி – 89.34மீ தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி!

By Rsiva kumar  |  First Published Aug 6, 2024, 3:58 PM IST

பாரிஸ் ஒலிம்பிக்கில் 11ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று குரூப் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 89.34மீ தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தவிர மற்ற நாடுகள் ஒன்றுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் என்று கைப்பற்றி வருகின்றன. ஆனால், இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் தான் 3 வெண்கலப் பதக்கங்களை குவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார். சாதவிக் – சிராக் ரெட்டி ஜோடியும் ஏமாற்றம் அளித்தது.

ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் 9ஆவது இடம் பிடித்த கிஷோர் ஜெனா!

Latest Videos

undefined

மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா இன்று நடைபெறும் ஈட்டி எறிதல் தகுதி சுற்று குரூப் பி பிரிவில் போட்டியிடுகிறார். இதில், அவர் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரைத் தொடர்ந்து பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரிலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜெனாவும் போட்டியிட்டார். பிற்பகல் 1.50 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் கிஷோர் ஜெனா ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று குரூப் ஏ பிரிவு போட்டியில் விளையாடினார்.

3000மீ ஸ்டீபிள்சேஸ் ஹீட்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக அவினாஷ் சேபிள் சாதனை!

இதில், முதல் முயற்சியில் 80.73மீ தூரம் எறிந்த ஜெனா, 2ஆவது முயற்சியில் பவுலாக எறிந்தார். கடைசியில் 3ஆவது முயற்சியில் 81.21மீ எறிந்து 9ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற குரூப் பி சுற்று போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 89.34மீ தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

🇮🇳🔥 𝗚𝗢𝗟𝗗 𝗡𝗢. 𝟮 𝗙𝗢𝗥 𝗡𝗘𝗘𝗥𝗔𝗝 𝗖𝗛𝗢𝗣𝗥𝗔? Neeraj Chopra advanced to the final of the men's javelin throw event thanks to a superb performance from him in the qualification round.

💪 He threw a distance of 89.34m in his first attempt to book his place in the final.… pic.twitter.com/EAcJscqCFc

— India at Paris 2024 Olympics (@sportwalkmedia)

 

click me!