இந்தியா விளையாடும் போட்டிகள் நாள் 11 – ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று – கனவை நிறைவேற்றுவாரா நீரஜ் சோப்ரா?

By Rsiva kumar  |  First Published Aug 6, 2024, 11:45 AM IST

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது நாள் போட்டியில் இந்தியா மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது.


கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடக்க விழா நிகழ்ச்சியுடன் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் முடிவில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதில், இந்தியா நீச்சல், ரோவிங், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், டென்னிஸ், ஜூடோ, குத்துச்சண்டை, குதிரையேற்றம், படகு போட்டி ஆகிய விளையாட்டுகளில் தோல்வி அடைந்து வெளியேறியது.

3000மீ ஸ்டீபிள்சேஸ் ஹீட்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக அவினாஷ் சேபிள் சாதனை!

Latest Videos

undefined

இந்த நிலையில் தான் 11ஆவது நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி இன்று இந்தியா டேபிள் டென்னிஸ், தடகளம், மல்யுத்தம், ஹாக்கி ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முக்கியமான போட்டியான ஈட்டி எறிதல் மற்றும் ஹாக்கி போட்டிகள் இடம் பெற்றுள்ளன. ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஜெனா இருவரும் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டி எத்தனை தொடங்குகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க….

நடக்ககூட முடியல; கிரிக்கெட்டில் சச்சினின் ஜிகிரி தோஸ்தாக இருந்த வினோத் காம்ப்ளியா இது? ஷாக்கிங் வீடியோ

பிற்பகல் 1:30 மணி: ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ்

இந்திய அணி vs சீனா அணி

ஹர்மீத் தேசாய், சரத் கமல், மானவ் தாக்கர் – எலிமினேஷன் சுற்று போட்டி (16ஆவது சுற்று)

பிற்பகல் 1.50 மணி – தடகளம்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – தகுதிச் சுற்று குரூப் ஏ – கிஷோர் ஜெனா

பிற்பகல் 2.30 மணி – மல்யுத்தம்

மகளிருக்கான ப்ரீஸ்டைல் 50 கிலோ, 16ஆவது சுற்று போட்டி – வினேஷ் போகட் vs யுய் சுசாகி (ஜப்பான்)

பிற்பகல் 2.50 மணி – தடகளம்

மகளிருக்கான 400மீ ரீபிசேஜ் (2ஆவது வாய்ப்பு) சுற்று – கிரண் பாகல்

பிற்பகல் 3.20 மணி – தடகளம்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – தகுதிச் சுற்று குரூப் பி – நீரஜ் சோப்ரா

மாலை 4.20 மணி – மல்யுத்தம்

மகளிருக்கான ப்ரீஸ்டைல் 50 கிலோ காலிறுதி போட்டி (16ஆவது சுற்று போட்டியில் தகுதி பெற்றால் மட்டும்) – வினேஷ் போகட்

இரவு 10.25 மணி – மல்யுத்தம்

மகளிருக்கான ப்ரீஸ்டைல் 50 கிலோ அரையிறுதி போட்டி (காலிறுதிப் போட்டியில் தகுதி பெற்றால் மட்டும்) – வினேஷ் போகட்

இரவு 10.30 மணி: ஹாக்கி

இந்தியா vs ஜெர்மனி – அரையிறுதிப் போட்டி

இதையும் படியுங்கள்... Paris 2024:கடைசியில் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி – பேட்மிண்டனில் ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறிய இந்தியா!

click me!