பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் 140 ஆதரவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதித்துள்ள நிலையில் 117 விளையாட்டு வீரர்கள் கொண்ட பட்டியலை உறுதி செய்துள்ளது.
கோடைகால ஒலிம்பிக் 2024 தொடரானது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் பாரீஸை சுற்றிலும் 35 இடங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்டேட் டி பிரான்ஸ் (கால்பந்து), ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியம் (டென்னிஸ்), சாம்ப்ஸ் எலிசீஸ், பாரீஸ் லா டிபென்ஸ் அரேனா, போர்டி டி லா சாபெல்லே அரேனா, அரேனா பாரீஸ் நோர்டு என்று 35 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, சுமித் நாகல், ரோகன் போபண்ணா, துலிகா மான், விஷ்ணு சரவணன், பால்ராஜ் போவிங், மானவ் தக்கர், அனுஷ் அகர்வாலா, நிஷாந்த் தேவ் ஆகியோர் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
140 துணை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஒலிம்பிக் குழுவிற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவை முன்னிலைப்படுத்த 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் உலக தரவரிசை பட்டியல் மூலமாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றிருந்த தடகள வீராங்கனை அபா கதுவா தடகள வீரர், வீராங்கனைகளின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதற்கான காரணமும், விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) துணைத் தலைவராக உள்ளார். 2024 பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் விதிமுறையின் படி, துணை ஊழியர்கள் தங்குவதற்கான வயது வரம்பு 67 மட்டுமே.
இதில் 11 இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள், 5 மருத்துவக் குழு உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூடுதல் பயிற்சியாளர்கள் மற்றும் 72 பேர் கொண்ட துணை ஊழியர்கள் அரசு செலவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா பங்கேற்க வாய்ப்பு!
தடகளம்
தடகளப் பிரிவில் கதுவா இல்லாத போதிலும் தடகளப் போட்டியில் (11 வீராங்கனைகள் மற்றும் 18 வீரர்கள்) 29 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் (11 வீராங்கனைகள், 10 வீரர்கள்) 21 விளையாட்டு வீரர்கள், ஹாக்கியில் 19 விளையாட்டு வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதி செய்தது.
இதே போன்று, டேபிள் டென்னிஸ் 8 விளையாட்டு வீரர்கள், பேட்மிண்டனில் பிவி சிந்து உள்பட 7 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். மேலும், மல்யுத்தம், வில்வித்தை, குத்துச்சண்டை ஆகியவற்றில் தலா 6 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கோல்ஃப் (4), டென்னிஸ் (3), நீச்சல் (2), படகோட்டம் (2) மற்றும் குதிரையேற்றம், ஜூடோ, படகோட்டுதல் மற்றும் பளுதூக்குதல் ஆகியவற்றிற்கு தலா ஒரு விளையாட்டு வீரர்கள்.
மகளிர் ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் – 19ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ பிரிவில் பளுதூக்கும் வீராங்கனை ஆவார். ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.