Paris Olympics 2024 – நாளை ஜூலை 27, இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? முதல் பதக்கம் வெல்லுமா?

By Rsiva kumarFirst Published Jul 26, 2024, 3:54 PM IST
Highlights

பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது இன்று இரவு 11 மணிக்கு தொடங்கும் நிலையில், இன்று எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. நாளை முதல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது ஜூலை 26ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இன்று இரவு 11 மணிக்கு செய்ன் நதியில் ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். செய்ன் நதியில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.

படகில் அணிவகுப்பு நிகழ்ச்சி – ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் தொடக்க விழா – எப்படி நேரலையில் பார்ப்பது?

Latest Videos

இதில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது நாட்டிற்காக கொடியை ஏந்திச் சென்று அணிவகுப்பு நடத்துவார்கள். இந்தியா சார்பில் சரத் கமல் மற்றும் பிவி சிந்து இருவரும் இந்திய கொடியை ஏந்திச் சென்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். முதல் நாடாக ஒலிம்பிக்கை தாயகமாக கொண்ட கிரீஸ் அணி வகுப்பு நிகழ்ச்சியை தொடங்குகிறது. இந்தியா 84ஆவது நாடாகவும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடைசியாக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன.

ஒலிம்பிக் தொடக்க விழாவில் கிரேஸ் முதல் பிரான்ஸ் வரையில் அணி வகுப்பு நிகழ்ச்சி – இந்தியாவிற்கு 84ஆவது இடம்!

பிரான்ஸ் கடைசியாக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. இரவு 11 மணிக்கு தொடங்கும் தொடக்க நிகழ்ச்சி 3 மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்சியானது ஆஸ்டர்லிட்ஸில் தொடங்கி பாரிஸின் சின்னமான ஈபிள் டவர் அருகில் உள்ள டிரோகாடெரோவில் முடிவடைகிறது. அதோடு ஈபிள் டவருக்கு எதிரில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடங்கி வைக்கிறார்.

ஈபிள் டவருக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவை ஸ்டார் ஸ்போட்ஸ் 18 1 ஹெச்டி, ஸ்போர்ட்ஸ் 18 1 எஸ்டி சேனல்களில் நேரடியாக பார்க்கலாம். இந்த நிலையில் தான் இன்று தொடங்கும் ஒலிம்பிக் விழாவைத் தொடர்ந்து நாளை என்னென்ன போட்டிகள் நடைபெறுகிறது. யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?

ஜூலை 27: பேட்மிண்டன்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று (ஹெச் எஸ் பிரணாய், லக்‌ஷயா சென்)

ஆண்கள் இரட்டையர் பிரிவு குரூப் சுற்று (சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராஜ் ஷெட்டி)

மகளிர் ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று (பிவி சிந்து)

மகளிர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்று (தனிஷா கிராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா)

இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

ரோவிங்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு – பால்ராஜ் பனவர் – பிற்பகல் 12.30 மணி

துப்பாக்கி சுடுதல்: 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச்சுற்று (சந்தீப் சிங், அர்ஜூன் பபுதா), இளவேனில் வளரிவான், ரமிதா ஜிண்டால்

இந்தப் போட்டி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

துப்பாக்கி சுடுதல்: 10 மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதிச்சுற்று (சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா) – பிற்பகல் 2 மணி

துப்பாக்கி சுடுதல்: 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பதக்க சுற்று (தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே)– பிற்பகல் 2 மணி

டென்னிஸ்: முதல் சுற்று போட்டிகள்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு: சுமித் நாகல்

ஆண்கள் இரட்டையர் பிரிவு – ரோகன் போபண்ணா மற்றும் என் ஸ்ரீராம் பாலாஜி

இந்தப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச்சுற்று – ரிதம் சங்வான், மனு பாக்கர் - இந்தப் போட்டி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு – சரத் கமல், ஹர்மீத் தேசாய்

மகளிர் ஒற்றையர் பிரிவு (முதல்நிலை சுற்று) – மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா

இந்தப் போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

குத்துச்சண்டை – மகளிர் 54 கிலோ எடைபிரிவு – பிரீதி பவர் (32ஆவது சுற்று) – இரவு 7 மணி

ஹாக்கி – ஆண்கள் குரூப் பி – இந்தியா – நியூசிலாந்து - இந்தப் போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.

click me!