பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா இன்று 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடரானது இன்று 26ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலிமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மாற்று வீரர்கள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில், 16 விளையாட்டுகளில் 69 பிரிவுகளில் 329 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய வீரர்கள் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர்.
Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?
undefined
கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்களை வென்ற நிலையில் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்தியா அதிகளவில் பதக்கத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் பிரேக்கிங் (பிரேக் டான்ஸிங்), சர்ஃபிங், ஸ்கேட் போரிங், ஸ்போர்ட் கிளைம்பிங் என்று 4 விதமான விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
வில்வித்தை: பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி! ரேங்கிங் சுற்றில் 4வது இடம்!
ஆனால், பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செய்ன் நதிக்கரையில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கை தாயகமாக கொண்ட கிரிஸ் முதல் நாடாக அணிவகுப்பை தொடங்குகிறது. கிரீஸ் நாட்டைச் சேர்ந்த கியானிஸ் அன்டெட்டோகௌன்ம்போ அந்நாட்டு கொடியை ஏந்தி சென்று அணியை வழிநடத்துகிறார்.
Paris Olympics 2024: பாரிஸ் வந்து இறங்கிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா!
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியானது செய்ன் நதியில் நடைபெற இருக்கிறது. இதில், விளையாட்டு வீரர்கள் 106 படகுகளில் 6 கிலோ மீட்டர் தூரம் வரையில் அணிவகுத்து செல்ல இருக்கின்றனர். ஒலிம்பிக் தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சியானது டொரக்கடோவில் நடைபெறுகிறது. தொடக்க விழா நிறைவடையும் டொரக்கடோவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்ட போட்டிகள் நடைபெறும்.
இந்த தொடக்க விழா இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடக்க விழா செய்ன் நதிக்கரையில் நடத்தப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செய்ன் நதிக்கரையில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கை தாயகமாக கொண்ட கிரிஸ் முதல் நாடாக அணிவகுப்பை தொடங்குகிறது.
பாரிஸ் கடைசி நாடாக அணிவகுப்பை நடத்துகிறது. அகர வரிசைப்படி பார்த்தால் இந்தியா 84ஆவது நாடாக அணிவகுப்பை மேற்கொள்கிறது. இந்தியா சார்பில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இருவரும் தேசிய கொடியை ஏந்திச் சென்று அணி வகுப்பு நடத்துகின்றனர். அமெரிக்கா (2028 ஒலிம்பிக் நடத்தும் நாடு) மற்றும் ஆஸ்திரேலியா (2032 ஒலிம்பிக் நடத்தும் நாடு) பிரான்ஸ் நாட்டிற்கு முன்னதாக அணிவகுப்பை நடத்துகின்றன.
ஈபிள் கோபுரத்திற்கு எதிரில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்படுகிறது. இரவு 11 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா நள்ளிரவு 3 வரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடக்க விழாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி, நடனம், லேசன், டிரோன், பிரான்ஸ் விமானப் படையினரின் வான் நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் என்று அனைத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை 27 ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.