
ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் வேலன்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பந்தாடியது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற லீக் கால்பந்து போட்டியில் 5-ஆவது நிமிடத்தில் சைமன் ஸாஸாவும், 9-ஆவது நிமிடத்தில் ஃபாபியன் ஓரெல்னாவும் கோலடிக்க, வேலன்சியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான ரியல் மாட்ரிட் அணி கோலடிக்க தொடர்ந்து போராடியது. அதற்கு 44-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி கோலடிக்க, மாட்ரிட் அணிக்கு முதல் கோல் கிடைத்தது.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் வேலன்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. இதனால் வேலன்சியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
ரியல் மாட்ரிட் அணி 52 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தாலும், இந்த ஆட்டத்தில் தோற்றது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.