சச்சினைப் பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான் வீரர்…

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 03:25 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
சச்சினைப் பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான் வீரர்…

சுருக்கம்

அபுதாபி,

சச்சினின் 35 வயதிற்கு பிறகு, 12 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 35 வயதில், 13 சதங்கள் அடித்து சச்சினைப் பின்னுக்குத் தள்ளினார்.

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் அணிக்கு திரும்பினார்.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அசார் அலி ஓட்டம் ஏதுமின்றியும், சமி அஸ்லாம் 6 ஓட்டங்களிலும் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடி அணியை காப்பாற்றினர். ஆசாத் ஷபிக் 68 ஓட்டங்களில் போல்டு ஆனார்.

4–வது வரிசையில் களம் கண்ட 38 வயதான யூனிஸ்கான் நேர்த்தியாக ஆடினார். 83 ஓட்டங்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த அவர் தனது 33–வது சதத்தை எட்டினார். அவர் 35 வயதுக்கு பிறகு மட்டும் 13 சதங்களை விலாசியுள்ளார். இது ஒரு சாதனையாகும்.

இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), கிரஹாம் கூச் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட் (இந்தியா) ஆகியோர் 35 வயதுக்கு பிறகு 12 சதங்களை அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை யூனிஸ்கான் முறியடித்தார்.

யூனிஸ்கான் 127 ஓட்டங்கள் (205 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் அவுட் ஆனார். போதிய வெளிச்சம் இல்லாததால் 6 ஓவர் முன்கூட்டியே முடிக்கப்பட்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 304 ஓட்டங்கள் சேகரித்துள்ளது.

54 ஓட்டங்களில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்த கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 90 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!