வெற்றி வெறியில் பாகிஸ்தான் வீரர்கள்!! இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் தீவிர பயிற்சி

By karthikeyan VFirst Published Sep 14, 2018, 1:50 PM IST
Highlights

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர் ஃபஹீம் அஷ்ரஃப் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பாகிஸ்தான் வீரர் ஃபஹீம் அஷ்ரஃப் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். உலகளவில் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும். போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றிக்காக வெறித்தனமாக ஆடும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் சர்வதேச தொடர்களை தவிர மற்ற போட்டிகளில் ஆடுவதில்லை. அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருசில போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு எகிறுகின்றன. கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதுதான் கடைசி. அந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து, தொடரை இழந்தது. 

அதன்பிறகு, ஓராண்டுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் வரும் 19ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் வீரர்களுக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் மற்றும் இரு நாட்டினருக்கும் அது மிகவும் முக்கியம். 

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரில் விராட் கோலி இல்லாததால் பாகிஸ்தான் அணி சற்று ஆறுதலாக உள்ளது. எனினும் இந்திய அணி ரோஹித் சர்மா, தவான், ராகுல், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் வலுவாக உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் அந்த அணி சார்பில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்நோக்கும் இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, அந்த அணி வீரர் ஹசன் அலி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வீரர் ஃபகீம் அஷ்ரஃப், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு பாகிஸ்தான் வீரரின் கனவு. எனக்கும் அப்படித்தான். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக ஆடி வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறோம். கோலி இல்லையென்றாலும் இந்திய அணி மிகச்சிறந்த அணி. அதனால் இந்திய அணியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம் என ஃபஹீம் அஷ்ரஃப் தெரிவித்துள்ளார். 
 

click me!