2019 உலக கோப்பையில் தோனியா..? ரிஷப் பண்ட்டா..? சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 14, 2018, 12:58 PM IST
Highlights

2019 உலக கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக தோனி, ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் ஆடவேண்டுமென  முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

2019 உலக கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக தோனி, ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் ஆடவேண்டுமென  முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனியின் ஓய்விற்கு பிறகு, அவரது இடத்தை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்து வந்த இந்திய அணிக்கு, இங்கிலாந்து தொடரில் ஓரளவிற்கு பங்களிப்பு செய்த ரிஷப் பண்ட் சற்று ஆறுதலை அளித்திருக்கிறார். 

அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்தும் தோனி ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு அவரது இடத்தை பூர்த்தி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது ரிஷப் பண்ட்டாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. தோனிக்கு பிறகு அவரது இடத்தை ரிஷப் பண்ட் தான் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே அண்மைக்காலமாக ஃபார்மில்லாமல் தவித்துவரும் தோனி, மெச்சும்படி ஆடவில்லை. அதனால் அவர் மீதான விமர்சனங்களும் அவர் ஓய்வுபெற்று இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. எனினும் தோனி அடுத்த உலக கோப்பை வரை கண்டிப்பாக ஆடுவார் என்பதில் ஐயமில்லை. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், 2019 உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டுமென்பதே எனது கருத்து. ரிஷப் பண்ட்டை இப்போதிலிருந்தே ஒருநாள் போட்டிகளில் ஆடவைத்தால் கூட, உலக கோப்பைக்குள் அவரால் 15 போட்டிகளை தாண்டி ஆடமுடியாது. தோனியின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் இதெல்லாம் ஒரு அனுபவமே கிடையாது. தோனி 300 போட்டிகளுக்கு மேல் ஆடியுள்ளார். அவரது அனுபவம் உலக கோப்பைக்கு தேவை. இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடலாம்; சிக்ஸர்கள் விளாசலாம். ஆனால் தோனி தனி நபராக போட்டியை வெற்றிகரமாக முடிக்க வல்லவர். தோனிக்கு பிறகு அவரது இடத்தை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்யலாம். ஆனால், உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!