நீயெல்லாம் ஒரு கேப்டன்னு சொல்லிக்காத!! கோலியை தெறிக்கவிட்ட கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Sep 14, 2018, 11:36 AM IST
Highlights

ஒரு கேப்டனாக விராட் கோலி களவியூகம் மற்றும் பந்துவீச்சு சுழற்சி ஆகியவற்றில் சொதப்புவதாகவும் அவற்றில் கோலி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஒரு கேப்டனாக விராட் கோலி களவியூகம் மற்றும் பந்துவீச்சு சுழற்சி ஆகியவற்றில் சொதப்புவதாகவும் அவற்றில் கோலி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என இந்திய அணி இழந்தது. இந்த தொடரை தோற்றதன் எதிரொலியாக கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 

இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஒரே வித்தியாசம், இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரன் தான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். பெரும்பாலான போட்டிகளில், இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் மற்றும் முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்திவிட்ட இந்திய அணியால், இங்கிலாந்து அணியின் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியவில்லை. 

சாம் கரன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், பட்லர் ஆகியோரின் பேட்டிங்கே இந்திய அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு கேப்டன் கோலியின் களவியூகம் மற்றும் பந்துவீச்சு சுழற்சியில் இருந்த குறைபாடுகளே காரணம் என்ற விமர்சனம் உள்ளது. 

கோலி கடந்த 2014ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவரது கேப்டன்சி மிகச்சிறப்பாக இல்லை என கவாஸ்கர் விமர்சித்துள்ளார். தென்னாப்பிரிக்க தொடரை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இழந்த இந்திய அணி, தற்போது இங்கிலாந்து தொடரையும் இழந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்தும் கோலியின் கேப்டன்சி குறித்தும் இந்தியா டுடேவிற்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில், விராட் கோலி ஒரு கேப்டனாக இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் இங்கிலாந்து தொடர் ஆகியவற்றில் அவரது செயல்பாடுகளை பார்த்துவருகிறோம். அவரது கள வியூகம், பந்துவீச்சு சுழற்சி முறை ஆகியவற்றில் குறைபாடுகள் உள்ளன. இதே தவறுகளை தொடர்ந்து கோலி செய்துவருகிறார். அவர் கேப்டனாகி இரண்டு ஆண்டுகளாகியும்(டெஸ்ட் அணியின் கேப்டனாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது) அவர் கேப்டனாக போதிய அனுபவில்லாமலேயே இருக்கிறார். ஒரு கேப்டனாக கோலி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். 

ஒரு வீரராக சிறப்பாக செயல்படும் கோலி, கேப்டனாக சொதப்புகிறார். முக்கியமாக வெளிநாட்டு தொடர்களில் இந்தியாவின் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நான்கு ஆண்டுகள் கோலி கேப்டனாக இருந்தாலும் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க கோலிக்கு தெரியவில்லை என ஏற்கனவே கவாஸ்கர் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!