ரசிகர்களுக்கு படுதோல்வியை பரிசளித்த இந்திய வீரர்கள்... கோப்பை கனவு சீட்டுக் கட்டுக்களைப் போல சரிந்த ஆட்டம்!

First Published Jun 19, 2017, 12:22 PM IST
Highlights
Pakistan beat India by 180 runs to win ICC Champions Trophy 2017 final


இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இல்லை என்ற மகுடத்தை இழந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி…

மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இறுதிப் போட்டி ஏகத்துக்கம் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது.

இந்த லைம் லைட்டைப் பயன்படுத்தி சில நொடி விளம்பரத்திற்கு கோடி ரூபாய் கட்டணம் வசூலித்து தொலைக்காட்சிகள் கல்லா கட்டின. சூதாட்டத்தில் குவிந்த தொகை மட்டும் 2 ஆயிரம் கோடி.ஆடும் லெவனில் உள்ள இந்திய வீரர்கள் நேற்று தெய்வங்ளாகவே பாவிக்கப்பட்டனர்.

 இப்படி ஹம்பக் ஏற்றப்பட்ட இறுதிப் போட்டியில் சொதப்பி, பாகிஸ்தானிடம் மகுடத்தை பறிகொடுத்திருக்கிறது இந்திய அணி. பாகிஸ்தான் நிர்ணயத்த இமாலய இலக்கை நோக்கி முன்னேற முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். பாகிஸ்தானின் 338 ரன்கள் இவருக்கே பத்தாது என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரோகித் சர்மா, பூஜ்ஜியத்துடன் நடையைக் கட்டினார்.

ரோகித் அவுட்டானா எல்லாம் முடிஞ்சுச்சா, நம்ம கிட்ட ஸ்டிராங் பேட்டிங் ஆர்டர் இருக்கு. டோன்ட் வொரி மச்சி, என அருகில் இருந்தவர்களை தேற்றியவர்களால் கூட நம்ப முடியவில்லை ஷிகர் தவானும், வீராட் கோலியும் பெவிலியன் திரும்பியதை.

யுவராஜ் சிங், தோனி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் எழும்பிப் பிரகாசிக்காததால் இந்தியாவின் கோப்பை கனவு சீட்டுக் கட்டுக்களைப் போல சரிந்தது.

இந்தியா முழுவதும் உச்சசாயலில் உரக்கக் கத்திக் கொண்டிருந்த தொலைக்காட்சிகள் பல பட்டென அணைக்கப்பட்டது. சில ட்ராக் மாற்றப்பட்டு காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், நகைச்சுவை காட்சிகளையும் வேண்டா வெறுப்பாய் காட்டிக் கொண்டிருந்தது.

எல்லாம் முடிஞ்சு போச்சு இன்னுமா டி குடிச்சுட்டு இருக்கீங்க, வீட்டுக்கு கெளம்புங்க என்று டீக்கடைக்காரர் வாடிக்கையாளர்களை விரட்டிக் கொண்டிருந்த நிலையில் ஆதர்சபுருஷனாக வந்தார் ஹர்திக் பாண்டியா.

ரேட்டிங்கே இல்லாத இந்தியாவின் ரன்ரேட்டை சட்டென ஜெட் வேகத்தில் எகிறச் செய்தார் பாண்டியா. பாண்டியா பலே பலே..வர்லாம் வா…! வர்லாம் வா.. என மூஞ்சிப் புக்கில்(முகநூல்) ஸ்டேட்டஸ்களை தட்டி ரகளை செய்து கொண்டிருந்தனர்.

6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என பாண்டியா நிகழ்த்திய. மாயாஜாலத்தால் இந்திய 158 ரன்களை எடுத்து கவுரவமான தோல்வியையே பெற்றது.

இந்திய அணியின் தோல்வி தென் இந்தியாவை விட வட இந்தியர்களையே அதிகம் கோபம் கொள்ளச் செய்தது.

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை பூசனிக்காயாகக் கருதி போட்டுடைத்தனர் ரசிகர்கள்.

இதுவரை ரசிகர்களால் சேவிக்கப்பட்ட விராட்கோலியின் புகைப்படம் அக்னி யாகத்திற்கு தீக்கிரையாகின. உச்சகட்டமாக சில இடங்களில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. மிஸ்டர் கூல் மகேந்திர சிங்கின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.

கொண்டாட்டத்தில் தொடங்கிய கிரிக்கெட் மனக்குமுறலில் முடிந்திருக்கிறது. வெற்றி பெற்றால் வீரர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தோல்வி அடைந்தால் காலில் போட்டு மிதிப்பதும் என்ன மாதிரியான டிசைன். விளையாட்டை விளையாட்டாக பார்ப்போமே…..

click me!