எங்களுடைய டி20 அணி இன்னும் வலுவான அணியாக உருவெடுக்கவில்லை – வீராட் கோலி…

Asianet News Tamil  
Published : Jul 11, 2017, 10:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
எங்களுடைய டி20 அணி இன்னும் வலுவான அணியாக உருவெடுக்கவில்லை – வீராட் கோலி…

சுருக்கம்

Our T-20 team has not yet become a strong- Veerat Kohli ...

எங்களுடைய டி20 அணி இன்னும் வலுவான அணியாக உருவெடுக்கவில்லை. வளர்ச்சிப் பாதையில்தான் இருக்கிறது என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

கிங்ஸ்டனில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் குவித்தது. ஆனால் பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர் எவின் லீவிஸ் 62 பந்துகளில் 12 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 125 ஒட்டங்கள் குவித்தார்.

இதனால் அந்த அணி 18.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வீராட் கோலி பேசியது:

“நாங்கள் 25 முதல் 30 ஓட்டங்கள் வரை கூடுதலாக சேர்த்திருக்கலாம். ஏனெனில் நாங்கள் 230 ஓட்டங்கள் வரை குவிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. பீல்டிங்கின்போது இரு முக்கிய கேட்சுகளை (லீவிஸ் கொடுத்தது) கோட்டைவிட்டோம்.

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் வெற்றிக்கான தகுதியுடையவர்களாக இருக்க முடியாது. எப்போதுமே சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கிறபோது, யாராவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று ஆட வேண்டும்.

தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடினார். ஆனால் யாராவது ஒருவர் 80 முதல் 90 ஓட்டங்கள் குவித்திருக்க வேண்டும். அதுதான் டி20 கிரிக்கெட்டுக்கு தேவை.

பெளலிங் மற்றும் பீல்டிங் சரியாக இல்லாதபோது அது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சாதகமாகிவிடும். எங்களுடைய டி20 அணி இன்னும் வலுவான அணியாக உருவெடுக்கவில்லை. வளர்ச்சிப் பாதையில்தான் இருக்கிறது. எனினும் எங்களின் ஒட்டுமொத்த செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தலைசிறந்த டி20 அணியாகும். கடந்த சில ஆண்டுகளாக அதே வீரர்கள்தான் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்கள். ஆனால் இந்திய அணியில் வீரர்கள் பரீட்சார்த்த அடிப்படையில் களமிறக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற தருணங்களில் ஏற்றமும், இறக்கமும் இருக்கத்தான் செய்யும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோல்வி கண்டோம். எஞ்சிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றோம். இந்தத் தொடரை நாங்கள் ரசித்து விளையாடினோம்” என்று கோலி தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

FIFA 2026 Prize Money: ஜெயிச்சா லைஃப் செட்டில்.. தோத்தாலும் 100 கோடி! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?
Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?