விம்பிள்டன் டென்னிஸ்: 10-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் முர்ரே…

Asianet News Tamil  
Published : Jul 11, 2017, 09:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
விம்பிள்டன் டென்னிஸ்: 10-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் முர்ரே…

சுருக்கம்

Wimbledon tennis Murray advanced for quarter finals the 10th time

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, குரோஷியாவின் மரின் சிலிச், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். முர்ரே பத்தாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 7-ஆவது நாளான நேற்று நடைபெற்ற 4-ஆவது சுற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் குரோஷியாவின் மரின் சிலிச் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே 7-6 (1), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பெனாய்ட் பேரை தோற்கடித்தார். இதன்மூலம் விம்பிள்டனில் தொடர்ந்து 10-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் முர்ரே.

கெர்பரை 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவிடம் தோற்கடித்தார்.

முகுருஸா தனது காலிறுதியில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை சந்திக்கிறார்.

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் அனா கொஞ்ஜூவை தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த 23 ஆண்டுகளில் விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீராங்கனை என்ற பெருமையை வீனஸ் பெற்றார்.

வீனஸ் தனது காலிறுதியில் லாத்வியாவின் ஜெலீனா ஆஸ்டாபெங்கோவை சந்திக்கிறார்.

ஆஸ்டாபெங்கோ தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 7-6 (6) என்ற நேர் செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தினார்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 7-6 (3), 6-2 என்ற நேர் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை தோற்கடித்தார்.

ஹேலப் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை எதிர்கொள்கிறார்.

கோன்டா தனது முந்தைய சுற்றில் 7-6 (3), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவை தோற்கடித்தார்.

இதன்மூலம் கடந்த 33 ஆண்டுகளில் விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோன்டா.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Natasa Stankovic: விவாகரத்துக்கு பின் மீண்டும் பாண்டியாவின் குடும்பத்துடன் நடாஷா? இணையத்தை உலுக்கும் வைரல் போட்டோ!
IPL 2026 | டிம் டேவிட் சிக்ஸர் மழை.. புதிய வரலாற்று சாதனை.. CSK-வை திணறடித்த ஆர்சிபி!