ஆசிய தடகள போட்டி….இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் பெற்றுத் தந்த சுதா சிங்……

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 08:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஆசிய தடகள போட்டி….இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் பெற்றுத் தந்த சுதா சிங்……

சுருக்கம்

one more gold medal to India ...sudha singh won the medal

ஆசிய தடகளம்போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில்  தங்கபதக்கம் வென்றார் .

22-வது ஆசிய தடகளப் போட்டிகள்  ஒடிஷா மாநிலம்  புவனேஷ்வரில் தற்போது நடைபெற்று வருகிறது. 45 நாடுகளைச் சார்ந்த  655 வீரர்கள் இந்தத் தடகளப் போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்தியா சார்பில் 94 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாளில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.

இரண்டாம் நாளான நேற்று ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ், தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான ஆரோக்கிய ராஜீவ், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்  இந்தியாவின் அஜய் குமார் தங்கம் வென்றார். பெண்கள் பிரிவு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிர்மலா ஷாரன், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சித்ரா ஆகியோர் தங்கம் வென்றனர்.

100, 400, 5,000 மீட்டர் ஒட்டப் பந்தயங்களில்  இந்திய வீராங்கனைகள் வெண்கல பதக்கங்களை வென்றனர். 

இந்நிலையில்  இன்று பெண்களுக்கான 3000 மீட்டர் 'ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய பைனலில் இந்தியா சார்பில் சுதா சிங், பருல் சவுத்தரி பங்கேற்றனர். இதில் பந்தய தூரத்தை 9 நிமிடம், 59.47 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த சுதா சிங், தங்கம் வென்றார். 

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர், 2010ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார். தவிர இது, ஆசிய தடகளத்தில் இவர் வென்ற 4வது பதக்கம் இதுவாகும்.

இதனையடுத்து இந்தியா இது வரையில் 7 தங்கப்பதக்கம்வென்று முதலிடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Natasa Stankovic: விவாகரத்துக்கு பின் மீண்டும் பாண்டியாவின் குடும்பத்துடன் நடாஷா? இணையத்தை உலுக்கும் வைரல் போட்டோ!
IPL 2026 | டிம் டேவிட் சிக்ஸர் மழை.. புதிய வரலாற்று சாதனை.. CSK-வை திணறடித்த ஆர்சிபி!