
இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை மாதம் 26-ஆம் தேதி இலங்கையில் தொடங்குகிறது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள், ஒரு டி-20 ஆகியப் போட்டிகளில் விளையா இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு 2009-ல் இந்திய அணி இலங்கையில் இதுபோல முழுத்தொடரில் பங்கேற்றது.
டெஸ்ட் போட்டிகள்:
முதல் டெஸ்ட் ஜூலை 26 – 30
இரண்டாவது டெஸ்ட்: ஆகஸ்ட் 3 - 7
மூன்றாவது டெஸ்ட்: ஆகஸ்ட் 12 - 16
ஒருநாள் தொடர்:
முதல் ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 20
இரண்டாவது ஒருநாள்: ஆகஸ்ட் 24
மூன்றாவது ஒருநாள்: ஆகஸ்ட் 27
நான்காவது ஒருநாள்: ஆகஸ்ட் 31
ஐந்தாவது ஒருநாள்: செப்டம்பர் 3
மற்றும் ஒரு டி20: செப்டம்பர் 6-ஆம் தேதி நடக்கிறது.
கடைசியாக 2015-ல் இலங்கையில் டெஸ்ட் தொடரை விளையாடிய இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.