ரசிகர்களிடம் இழந்த நம்பிக்கையே மீண்டும் பெறுவதே எங்கள் நோக்கம் - ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டன் டிம் பெயின்...

First Published Apr 20, 2018, 10:03 AM IST
Highlights
Our aim is to get back the hope that fans have lost - Australia new captain Tim Paine ...


பந்து சேதப்படுத்திய புகார் தொடர்பான பிரச்சனையில் ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் இழந்த நம்பிக்கையே மீண்டும் பெறுவதே எங்கள் உடனடி நோக்கம் என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக அந்த அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், பந்துவீச்சாளர் பாங்கிராப்ட் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா உத்தரவிட்டது. 

இந்த நிலையில் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக டிம் பெயின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம், "தற்போது திறந்த மனதுடன் நாங்கள் களம் காண உள்ளோம். 

பந்தை சேதப்படுத்திய விவகாரம் வீரர்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாகிவிட்டது. வருங்காலத்தில் வித்தியாசமான முறையில் ஆட்டங்களை ஆடுவோம்.

ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் இழந்த நம்பிக்கையே மீண்டும் பெறுவதே எங்கள் உடனடி நோக்கமாகும். 

தடை செய்யப்பட்ட மூன்று வீரர்களும் மீண்டும் அணிக்கு திரும்பலாம். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்களது இணைப்பு அமைய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 
 
 

tags
click me!