
பிரேசில் நாட்டிலுள்ள் ரியோ டிஜெனீரோவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை நிஷால் தனது முதல் உலகக் கோப்பையில் 458 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். அதோடு, தகுதிச் சுற்றில் 592 புள்ளிகள் பெற்றதன் மூலமாக அஞ்சும் மோட்ஜிலினின் (591 புள்ளிகள்) தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியாவிலிருந்து 16 பேர் பங்கேற்றனர். இதில், ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக வீரர் இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.