
நியூஸிலாந்து சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டிகளில் இந்திய வீரர்கள் திரளாக பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
நியூஸிலாந்து சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டிகளில் ஆக்லாந்தில் நடைபெறவுள்ளன. காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்காத அஜய் ஜெயராம், செளரப் வர்மா ஆகியோர் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
ஜெயராம் தனது தொடக்க ஆட்டத்தில் தைபேவின் சூ ஜென்னை எதிர்கொள்கிறார்.
அதேபோன்று, ஸ்வின் ஓபன் போட்டியில் காயமுற்ற செளரப் ஆஸி.யின் அபிநவ் மனோட்டாவே எதிர்கொள்கிறார்.
இந்திய அணியின் இதர வீரர்கள் சாய் பிரணீத், சமீர் வர்மா, லக்ஷயா சென், சுபாங்கர் தேவ், கரண் ராஜன் ஆகியோரும் ஆடவர் பிரிவில் கலந்து கொள்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
அதேபோன்று, மகளிர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி, ரிதுபர்ணா தாஸ், சாய் உஜெத்தா ராவ், கிருஷ்ண பிரியா, ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மற்றொரு பிரிவான இரட்டையர் பிரிவில் மனு அட்ரி - சுமித்ரெட்டி, அர்ஜுன் ரெட்டி - ராமச்சந்திரன், பிரான்சிஸ் அஸ்வின் - நந்தகோபால் இணைகளும், மகளிர் பிரிவில் மேக்னா - பூர்விஷா இணைகள், கலப்பு இரட்டையரில் பிரணவ் ஜெர்ரி - சிக்கிரெட்டி, இணைகளும் கலந்து கொண்டு தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.