ரியல் மாட்ரிட்டிடம் இருந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பார்சிலோனா... எல்லாம் மெஸ்ஸியின் செயல்...

 
Published : May 01, 2018, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
ரியல் மாட்ரிட்டிடம் இருந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பார்சிலோனா... எல்லாம் மெஸ்ஸியின் செயல்...

சுருக்கம்

barcelona won champion by Messi triple goal

ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிட்டிடம் இருந்த பட்டத்தை பார்சிலோனா அணி கைப்பற்றியது. 

ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகிறது. கிளப்புகளுக்கு இடையேயான இந்த கால்பந்து சாம்பியன் போட்டி லா லிகா என அழைக்கப்படுகிறது. 

இந்தாண்டுக்கான இறுதிப் போட்டியில் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவும் - டெபோர்டிவா லா குரோனா அணியும் மோதின. 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து தனது அணி 25-வது பட்டத்தை வெல்ல உதவினார்.  இறுதியில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் டெபோர்டிவா அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி வசம் இருந்த பட்டத்தை பார்சிலோனா அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை பார்சிலோனா இந்த சீசனில் தோல்வியே தழுவாத அணியாக திகழ்கிறது. 

பார்சிலோனா அணியின் கேப்டன் இனியஸ்டா இந்த சீசனோடு தனது 22 ஆண்டுக்கால தொடர்பை முடித்துக் கொண்டு விடை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு போட்டியின் முடிவில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி
ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!