கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்!! நியூசிலாந்து மகளிர் அணி புதிய சாதனை

First Published Jun 9, 2018, 10:03 AM IST
Highlights
new record in odi cricket history


ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான ஸ்கோரை பதிவு செய்துள்ளது நியூசிலாந்து மகளிர் அணி. 

நியூசிலாந்து மகளிர் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்த அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான பேட்ஸ், அதிரடி சதமடித்து அசத்தினார். வாட்கின் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். பேட்ஸ் 151 ரன்களும் மேடி கிரீன் 121 ரன்களும் குவித்தனர்.

அமெலியா கெர் 81 ரன்கள் குவித்தார். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்தது. 491 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து நியூசிலாந்து அணி 346 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து மகளிர் அணி அடித்த இந்த ஸ்கோர் தான் அதிகபட்ச ஸ்கோர். ஆண்கள் கிரிக்கெட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அடித்த 444 தான் அதிகபட்ச ஸ்கோர். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டில் இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி 455 தான் அதிகபட்சமாக இருந்தது. 

இவையனைத்தையும் முறியடித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 490 என்ற உச்சபட்ச ஸ்கோரை அடித்து நியூசிலாந்து மகளிர் அணி மிரட்டியுள்ளது. 
 

click me!