
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை (23-ஆம் தேதி) தொடங்குகிறது.
இருபாலருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில், ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் இரயில்வே அணி சார்பில் பங்கேற்கிறார்.
நாடு முழுவதும் இருந்து சுமார் 650 மல்யுத்த வீரர்கள், 175 அதிகாரிகள் பங்கேற்க இருக்கும் இந்தப் போட்டி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இரயில்வே மற்றும் சர்வீஸஸ் உள்பட, இந்திய மல்யுத்த சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அமைப்புகளின் வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இரயில்வே அணி:
சாக்ஷி மாலிக் (58 கிலோ எடைப்பிரிவு), பஜ்ரங் (65 கிலோ), சத்யவர்த் கடியான் (97 கிலோ), தர்மேந்தர் தலால் (130 கிலோ).
ஹரியாணா அணி:
அமித் தாஹியா (57 கிலோ), மெüசம் கத்ரி (97 கிலோ), அமித் தங்கர் (70 கிலோ), ரவீந்தர் சிங் (59 கிலோ).
சர்வீஸஸ் அணி:
இரவீந்தர் கத்ரி (80 கிலோ), சந்தீப் தோமர் (57 கிலோ).
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.