சிறுவர்களுடன் விளையாடுற மாதிரி இருக்கு!! இந்திய அணியை அசிங்கப்படுத்திய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Aug 14, 2018, 5:17 PM IST
Highlights

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை பார்க்கும்போது, சிறுவர்களுக்கும் தேர்ந்த இளைஞர்களுக்கும் நடந்த போட்டி போன்று இருந்தது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் விமர்சித்துள்ளார். 

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை பார்க்கும்போது, சிறுவர்களுக்கும் தேர்ந்த இளைஞர்களுக்கும் நடந்த போட்டி போன்று இருந்தது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் விமர்சித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலி மட்டுமாவது நிலைத்து ஆடி சதமடித்தார். ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஒருவர் கூட சரியாக ஆடவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் அஷ்வின் மட்டுமே ஓரளவிற்கு நிலைத்து ஆடினார். 

இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டியில், போட்டி முழுவதுமே இங்கிலாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணி போட்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடவே இல்லை. அனைத்து பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்து பவுலர்களிடம் வரிசையாக சரணடைந்தனர். 

இந்திய அணி போராடாமல் தோற்றது குறித்து வீரேந்திர சேவாக், ஃபரோக் என்ஜினியர் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள்கூட விமர்சித்திருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், டெஸ்ட் தரவரிசையில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இங்கிலாந்து சூழலில் அந்த அணி தான் சிறந்தது. 

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி என்ற முறையில் இங்கிலாந்துடனான தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனால், சிறுவர்களுக்கும் தேர்ந்த இளைஞர்களுக்கும் இடையேயான போட்டி மாதிரி உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை கோலியும் அஷ்வினும் மட்டுமே சிறப்பாக ஆடினர். இந்திய அணியின் ஓய்வறையில் இருக்கும் சிறந்த வீரர்களை அணியில் ஆட வைக்க வேண்டும் என நாசர் ஹூசைன் தெரிவித்தார். 

click me!