
இந்திய கிரிக்கெட் அணியில் உடல்தகுதியோடு இருக்கும் வீரர்களில் முன்னாள்கேப்டனும் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி முக்கியமானவர்.
இளம் இந்திய அணியில் 25 வயதுக்குட்பட்ட வீரர்கள் பலர் இருந்தபோதிலும், தான் இன்னும் உங்களுக்கு சளைத்தவன் இல்லை என நிரூபித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மொஹாலியில் நேற்று இலங்கைக்கு எதிராக 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டி தொடங்கும் முன் காலையில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, 36வயதான தோனிக்கும், 24 வயதான ஹர்திக்பாண்டயாவுக்கும் இடையே ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது.
100 மீட்டர் தொலைவை யார் விரைவாக கடக்கிறார்கள் என்று சோதிக்கப்பட்டது. அனைவரும் 24 வயதான, துடிப்புடன் இருக்கும் ஹர்திக் பாண்டயாதான் முதலிடம் பிடிப்பார் என பெரும்பாலான வீரர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், போட்டி தொடங்கி விசில் அடித்தவுடன், ஹர்திக் பாண்டயா சரியான அழுத்தம் கொடுத்து முன்னேறினார், அனைவரும் நினைத்தது போல் நடக்கப்போகிறது என்று இருந்தனர். ஆனால், கால்பகுதி தொலைவு கடந்தவுடன், தோனி தனது மின்னல் வேக ஓட்டத்தை காண்பித்து, ஹர்திக்கை எளிதாக முன்னேறினார். 100 மீட்டல் முடிவில், ஹர்திக்கை அசாத்தியமாக தோற்கடித்து, தோனி முதலாவதாக வந்து அசத்தினார்.
இதைப் பார்த்த சகவீரர்கள் அனைவருக்கும் தோனியின் உடல்தகுதியைப் பார்த்து வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர். அணியில் மூத்த வீரரான தோனி, 36 வயதான பின்பும், 100 மீட்டர் ஓட்டத்தில் 24 வீரரை எளிதாக தோற்கடித்தது அனைவருக்கும் வியப்பை அளித்தது. இந்த வீடியோவை பி.சி.சி.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ஏறக்குறைய 40 ஆயிரம் பேர் வரை இதை பார்த்துள்ளனர்.
தோனியின் உடல் தகுதிக்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் தேவையா?...
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.