2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 141 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி...!

 
Published : Dec 13, 2017, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 141 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி...!

சுருக்கம்

India won by 141 runs in 2nd one-dayer against Sri Lanka.

இலங்கைக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவில் இழந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது ஆடி வருகிறது. 

தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பந்துவீச்சைத்தேர்வு செய்தார். 

இதையடுத்து ரோகித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான், 68 ரன்னில் திரிமன்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித்துடன் இணைந்தார்.

இதில் 40 வது ஓவரின் முடிவில் ரோகித் சதம் அடித்தார். பின்னர், தொடர்ந்து ஆடிய அவர் 153 பந்துகளில் 13 பவுண்ரிகளும் 12 சிக்சர்களும் பறக்கவிட்டு இரட்டை சதம் அடித்தார். 

இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ள ரோகித் உலக சாதனை படைத்துள்ளார். 

இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 208, ஷிரியாஸ் ஐயர் 88 , ஷிகார் தவான் 68 ரன்கள் எடுத்தனர். 

இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து படு தோல்வியடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் சமமாக உள்ளது. அடுத்து போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தொடரை கைப்பற்றும். இதனால் மிகுந்த பரபரப்பு கிரிக்கெட் ரசிகர்களை தொற்றி கொண்டுள்ளது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா