கோலி ரொம்ப மோசம்!! கிழித்தெறிந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Sep 11, 2018, 5:31 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் சாடியுள்ளார்.

விராட் கோலி ஒரு வீரராக சிறப்பாக ஆடினாலும், அவரது கேப்டன்சியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுகின்றன. வீரர்களை கையாளும் விதம், பவுலர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகங்கள், வீரர்களை அடிக்கடி மாற்றுவது என அடுக்கடுக்கான விமர்சனங்கள் கோலி மீது உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் எதிரொலியாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் கடைசி போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில், குக் மற்றும் மொயின் அலி ஆகிய இருவருக்கும் ரிவியூ கேட்டு அதை இந்திய அணி இழந்தது. இரண்டுமே அவுட்டாக இருக்க வாய்ப்பில்லை என்பது எளிமையாக தெரிந்தபோதிலும் அவை இரண்டிற்கும் ரிவியூ கேட்டு, முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனிலேயே இரண்டு ரிவியூ வாய்ப்பையும் இழந்தது இந்திய அணி. அந்த சமயத்தில் இங்கிலாந்தின் கையில் 9 விக்கெட்டுகள் எஞ்சியிருந்தன. இது மிகவும் மோசமான அணுகுமுறை.

ரிவியூ கேட்பதில் கேப்டன் கோலி சற்று கவனமாக செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் அறிறுவுத்தியிருந்தார். பவுலர்கள் சற்று நம்பிக்கையுடன் அம்பயரிடம் அப்பீல் செய்து அதை அம்பயர் மறுத்துவிட்டாலே உடனடியாக கோலி ரிவியூ கேட்டுவிடுகிறார். அவருக்கு பவுலரும் விக்கெட் கீப்பரும் உதவ வேண்டும். கோலியும் கொஞ்சம் உணர்ச்சிகளை அடக்கி சுய கட்டுப்பாட்டுடன் நிதானமாக செயல்பட வேண்டும் என அகார்கர் அறிவுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், கோலி அவசரப்பட்டு ரிவியூ கேட்பதை சாடியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், உலகின் சிறந்த பேட்ஸ்மேனும் விராட் தான், ரிவியூ கேட்பதில் மோசமானவரும் விராட் தான் என சாடியுள்ளார். 

Virat is the best Batsman in the World .. .. Virat is the worst reviewer in the World ..

— Michael Vaughan (@MichaelVaughan)
click me!