பாகிஸ்தான் வீரரை பயிற்சியாளரா வச்சுகிட்டு ஹர்பஜனிடம் ஆலோசனை கேட்ட இங்கிலாந்து ஸ்பின்னர்!!

By karthikeyan VFirst Published Sep 11, 2018, 4:03 PM IST
Highlights

இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலரான மொயின் அலி, ஸ்பின் பவுலிங் ஆலோசகராக சாக்லைன் முஷ்தாக்கை வைத்துக்கொண்டு இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங்கிடம் ஆலோசனை கேட்டுள்ளார். 
 

இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலரான மொயின் அலி, ஸ்பின் பவுலிங் ஆலோசகராக சாக்லைன் முஷ்தாக்கை வைத்துக்கொண்டு இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங்கிடம் ஆலோசனை கேட்டுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணியில் ஆடாத மொயின் அலி, நான்காவது போட்டியில் களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். அந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் மொயின் அலி. 

அந்த பிட்ச்சில் இருந்த ரஃப் பேட்சஸ்களில் பந்தை சரியாக பிட்ச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை செய்ய அஷ்வின் தவறியதால்தான் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஓவலில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின்போது இரண்டாம் நாள் ஆட்டத்தில் சரியாக சோபிக்காத மொயின் அலி, இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங்கிடம் ஆலோசனை கேட்டுள்ளார். 

தன்னிடம் மொயின் அலி ஆலோசனை கேட்டதாகவும் தான் கூறிய ஆலோசனையின்படியே பந்துவீசியது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பேசிய ஹர்பஜன் சிங், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ரஃப்பான இடங்களில் சரியாக பந்துவீசவில்லை என கருதிய மொயின் அலி, என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் அவரிடம், சரியாகத்தான் வீசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆடுகளத்தின் ரஃப்பான இடங்களில் பந்தை பிட்ச் செய்ய அதிகமாக முயற்சிக்கிறீர்கள். அதை குறைத்துக்கொள்ளுங்கள். அதிகமான விரிசல்கள் இல்லாத இதுபோன்ற ஆடுகளத்தில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யுங்கள் என்று கூறினேன். எனது ஆலோசனையின்படியே மொயின் அலி பந்துவீசியதை பார்த்தது சிறப்பாக இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார். 

ஹர்பஜன் சிங்கிடம் மொயின் அலி ஆலோசனை கேட்டதும் ஹர்பஜன் சிங் ஆலோசனை வழங்கியதும் ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால், பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் பவுலரான சாக்லைன் முஷ்தாக் தான், இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலிங் ஆலோசகராக உள்ளார். மிகச்சிறந்த ஸ்பின்னரான முஷ்தாக்கை ஆலோசராக பெற்றுக்கொண்டு, மொயின் அலி ஹர்பஜன் சிங்கிடம் ஸ்பின் ஆலோசனை பெற்றிருப்பது ஹர்பஜன் சிங்கை உயர்த்தி பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. 
 

click me!