mi vs dc: rohit sharma: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா! ரோஹித் சர்மாவுக்கு என்ன சோதனை

By Pothy Raj  |  First Published Mar 28, 2022, 4:58 PM IST

mi vs dc: rohit sharma: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி அடைந்த சோகத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த அதிர்ச்சி கிடைத்துள்ளது.


டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வி அடைந்த சோகத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த அதிர்ச்சி கிடைத்துள்ளது.

மும்பை தோல்வி

Tap to resize

Latest Videos

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட்செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

எதிர்பாராத தோல்வி

178 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு நிச்சமாக டெல்லி கேபிடல்ஸ் சேஸிங் செய்யமாட்டார்கள் என்றமிதப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பந்துவீசியதற்கு சரியான பதிலடி கிடைத்தது.

ஒரு கட்டத்தில் ஆட்டம் மும்பையின் கையில்தான் இருந்தது. அக்ஸர் படேல், லலித் யாதவ் கூட்டணியைப் பிரித்திருந்தால் ஆட்டம் மும்பை வசம் இருந்திருக்கும் ஆனால், இருவரையும் பிரிக்கமுடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் மகாமட்டமாகப் பந்துவீசினார்கள். 
அதிலும் சாம்ஸ் வீசிய 18-வது ஓவர்தான் ஆட்டம்தான் திருப்புமுனையாகும். இந்த ஓவரில் 3 சிக்ஸர், பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை லலித், அக்ஸர் இருவரும் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அடுத்தஅதிர்ச்சி

ஒட்டுமொத்தத்தில் வெற்றியை கைநழுவவிட்டு ரோஹித் சர்மா அணி மிரண்டுபோனது. இந்த தோல்வியைச் சற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த அதிர்ச்சியாக அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசாமல் கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துக்கொண்டது.இதையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு போட்டி ஊதியத்திலிருந்து ரூ.12 லட்சம் அபராதமாக ஐபிஎல்நிர்வாகம் விதித்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி செய்த முதல் த

click me!