rcb vs pbks: டூப்பிளசிஸ் ருத்ரதாண்டவம்; கோலி, தினேஷ் அதிரடி: பஞ்சாப்பை பஞ்சுபஞ்சாக்கிய ஆர்சிபி

Published : Mar 27, 2022, 09:38 PM ISTUpdated : Mar 27, 2022, 09:42 PM IST
rcb vs pbks: டூப்பிளசிஸ் ருத்ரதாண்டவம்; கோலி, தினேஷ் அதிரடி: பஞ்சாப்பை பஞ்சுபஞ்சாக்கிய ஆர்சிபி

சுருக்கம்

rcb vs pbks:டூப்பிளசிஸின் ருத்ரதாண்டவ பேட்டிங், கோலி, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் நவிமும்பையில் நடந்துவரும் ஐபிஎல்15-வது சீசன் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 206 ரன்கள் நிர்ணயித்துள்ளது ஆர்சிபி அணி.

rcb vs pbks:டூப்பிளசிஸின் ருத்ரதாண்டவ பேட்டிங், கோலி, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் நவிமும்பையில் நடந்துவரும் ஐபிஎல்15-வது சீசன் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 206 ரன்கள் நிர்ணயித்துள்ளது ஆர்சிபி அணி.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்துள்ளது.

அந்த அணியிந் கேப்டன் ஃபா டூப்பிளசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள்(7சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் காட்டடி ஆட்டம் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 

ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக பதவிஏற்று முதல் ஆட்டத்தில் அதிகபட்சமாக ஸ்கோர் செய்த கேப்டன்களில் 4-வது கேப்டன் என்ற பெருமையை டூப்பிளசிஸ் பெற்றுவிட்டார். இதற்கு முன் சாம்ஸன்(119), மயங்க்அகர்வால்(99), ஸ்ரேயாஸ் அய்யர்(93) ஆகியோர் உள்ளனர்.

ஆர்சிபி அணி 9ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 11 ஓவர்களில் 148 ரன்கள் சேர்த்துள்ளது. 

துணையாக ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 41 ரன்களுடனும்(2சிக்ஸர், ஒருபவுண்டரி), தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 32 ரன்களுடனும்(3சிக்ஸர், 3 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு படுமோசமாக அமைந்திருந்தது. பஞ்சாப் அணித் தரப்பில் 23 உதரிகள் வாரி வழங்கப்பட்டன. இதில் 12 வைடு, 5 பைஸ், 6 லெக்பை அடங்கும். 4வது பெரிய ஸ்கோர் உதிரிகள்தான்.

பஞ்சாப் அணியில் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங் மட்டும்தான் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ராகுல் சஹர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் ஒரு விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 31 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டும் வீழ்த்தினர். மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். 

பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 200 ரன்கள் இலக்கு மிகப்பெரியதுதான். ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் அடித்து அதை சேஸிங் செய்த ஆட்டங்கல் மிகச்சிலதான். ஆர்சிபி பந்துவீச்சை சமாளித்து பஞ்சாப் அணி சேஸிங் செய்வது சற்று ஸ்வாரஸ்யமானதுதான்.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. பந்து நன்றாக பேட்ஸ்மேனை நோக்கி எழும்பி வருவதால் அடித்து ஆடவசதியாகஇருக்கிறது. ஆதலால், சேஸிங்கும் சுவாரஸ்யமாகவே இருக்கும் என நம்பலாம். பஞ்சாப் அணயிலும் மயங்க்அகர்வால் தொடங்கி 9 வீரர்கள்வரை நன்றாக பேட் செய்யக்கூடியவர்கள் என்பதால், இந்த ஸ்கோரை சேஸிங் செய்யமுயற்சிப்பார்கள்
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?