mi vs csk: 2010 ஐபிஎல் பைனலுக்குப்பின் 12 ஆண்டுகளுக்குப்பிறகு தோனியின் வலையில் விழுந்த பொலார்ட்

By Pothy RajFirst Published Apr 22, 2022, 4:52 PM IST
Highlights

mi vs csk : 2010ம் ஆண்டு ஐபிஎல் டி20 பைனலில் தோனியின் வலையில் விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் அதேபோன்று நேற்றை ஆட்டத்திலும் 12 ஆண்டுகளுக்குப்பின் தோனியின் வலையில் விழுந்தார்.

2010ம் ஆண்டு ஐபிஎல் டி20 பைனலில் தோனியின் வலையில் விழுந்து விக்கெட்டை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் அதேபோன்று நேற்றை ஆட்டத்திலும் 12 ஆண்டுகளுக்குப்பின் தோனியின் வலையில் விழுந்தார்.

2010ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியின் பைனல் குறித்த சின்ன நினைவூட்டல். முதலில் ஆடிய தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 114 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய பொலார்ட்9 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை திசைதிருப்பி மும்பை அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

அந்த நேரத்தில் பொலார்ட்டுக்கு வித்தியாசமான பீல்டிங்கை கேப்டன் தோனி அமைத்தார். லாங் ஆனில் ஏற்கெனவே ஒரு பீல்டர் இருந்தபோதிலும் மிட்ஆனில் பவுண்டரி எல்லையை ஒட்டி மேத்யூ ஹேடனை நிறுத்தினார். 

சிஎஸ்கே வீரர் மோர்கல் வீசிய பந்தை பொலார்ட் தூக்கி அடிக்க சிக்ஸருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ஹேடனிடம் கேட்சாக மாறியது. இந்த கேட்சையும், பீல்டிங் செட் அப்பையும் பொலார்ட் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

அப்போது இந்த கேட்சைப் பிடித்த மேத்யூ ஹேடன் கூறுகையில் “ மிட்ஆனில் பவுண்டரி எல்லையில் என்னை தோனி ஏன் நிறுத்தினார் என எனக்குப் புரியவில்லை. ஆனால், பொலார்ட் அடித்தபந்தை நான் கேட்ச்பிடித்தபின்புதான் தோனியின் திட்டம் புரிந்தது. இந்த கேட்சை மட்டும் பிடிக்காமல்இருந்தால் ஆட்டம் திசைதிரும்பியிருக்கும்” எனத் தெரிவித்தார்

இதேபோன்ற பீல்டிங் செட்அப்பை நேற்றை ஆட்டத்தில் பொலார்ட்டுக்கு எதிராக தோனி அமைத்தார். கேப்டன் ஜடேஜாவாக இருந்தபோதிலும் பொலார்ட்டுக்கு பீல்டிங்கை தோனிதான் அமைத்தார். தீக்சனாவை பந்துவீசச் செய்து, மிட்ஆனில் பவுண்டரி எல்லையில் ஷிவம் துபேவை தோனி நிறுத்தினார்.

ஏற்கெனவே பவுண்டரி, சிக்ஸர் அடித்து வேகமாக இருந்த பொலார்ட், தீக்சனா வீசிய பந்தில் தூக்கி அடித்தார். சிக்ஸருக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியாக பவுண்டரி கோட்டுக்கு பக்கத்தில் துபே கேட்ச் பிடித்து பொலார்டை வெளியேற்றினார். 

2010ம் ஆண்டு ஐபிஎல் பைனலுக்குப்பின், 12 ஆண்டுக்குப்பின் தோனி விரித்த வலையில் பொலார்ட் விழுந்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
2017ம் ஆண்டு ஸ்மித் கேப்டன்ஷிப்பில் புனே சூப்பர் ஜெயின்ட் அணியில் தோனி விளையாடியபோதும், இதேபோன்று பொலார்ட்டுக்கு எதிராக பீல்டிங்கை செட் செய்து ஆட்டமிழக்கச் செய்திருந்தார். அப்போது ஆடம் ஸம்பா பந்துவீச்சில் பொலாரட் அடித்த பந்தை மனோஜ் திவாரி கேட்ச் பிடித்தார்

click me!