
மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் டி20 போட்டி 34-வது லீக் ஆட்டத்தில் வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி
இந்த போட்டி முதலில் புனே நகரில்தான் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லி அணியில் வீரர்ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, போட்டி மும்பைக்கு மாற்றப்பட்டது.
டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்று இன்று ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. இதுவரை 6 போட்டிகளில் மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 4போட்டிகளில் வெற்றியும்,2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் யஜுவேந்திர சஹல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி, அணியை வெற்றி பெற வைத்தார்.
இரு அணிகளுமே பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் வலிமையாக உள்ளன. ராஜஸ்தான் அணியி்ல் உள்ள ஜாஸ் பட்லர் இதுவரை 2 சதங்கள் அடித்து மிரட்டல் ஃபார்மில் உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் டேவிட் வார்னர் 4 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்து அவரும் ஃபார்மை நிருபித்துள்ளார்.
இது தவிர ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்ஸன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், கருண் நாயர் என வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின், சஹல், ரியான் பராக், வேகப்பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, டிரன்ட் போல்ட், மெக்காய் ஆகியோர் உள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோக்கியா, மார்ஷ் இல்லாதது பெரிய பின்னடைவு. டேவிட் வார்னர், பிரித்வி ஷா கடந்த போட்டியில் எளிதான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். ஆனால் நடுவரிசையில் இதுவரை பெரிதாக எந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்கவில்லை.கேப்டன் ரிஷப் பந்த், ரோவ்மன் பாவெல் இருவருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.
பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது இருவருமே சிறப்பாகப் பந்துவீசி பஞ்சாப் அணியை வீழ்த்த முக்கியக் காரணமாகஇருந்தனர். குல்தீப் யாதவ், அக்ஸர் படேலும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
போட்டி நடக்கும் வான்ஹடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. இதில் ஒரு ஆட்டத்தில் இரு அணிகலும் சேர்த்து 350 ரன்களுக்கு குறைவில்லாமல் அடிக்கக்கூடிய மைதானமாகும். ஆதலால், பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியமும், சுழற்பந்துவீச்சும் எடுக்கும்.
டெல்லி அணி(உத்தேசவீரர்கள்)
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த், ரோவ்மன் பாவெல், லலித் யாதவ், சர்பாரஸ் கான், ஷர்துல் தாக்கூர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது
ராஜஸ்தான் ராயல்ஸ்(உத்தேச வீரர்கள்)
ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் சஞ்சு சாம்ஸன்(கேப்டன்), கருண் நாயகர், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஸ்வின், டிரன்ட்போல்ட், பிரசித் கிருஷ்ணா, மெக்காய், சஹல்
இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய துருப்புச்சீட்டுகளாக ஜாஸ் பட்லர், சாம்ஸன், டிரன்ட் போல்ட் அமைவார்கள். சாம்ஸன் கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக விரைவால 19 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தது திருப்புமுனையாக அமைந்தது. டிரன் போல்டின் அனுபமான பந்துவீச்சு டெல்லி அணிக்கு சவாலாக இருக்கும்.அதிலும் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு போல்டின் பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமம்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர் வார்னரை வீழ்த்திவிட்டாலே அடுத்தடுத்துவரும் பேட்ஸ்மேன்களிடம் நிலைத்தன்மை இருக்காது. எளிதாக விக்கெட்டுகளைவீழ்த்திவிடலாம். ஆதலால் வார்னர்தான் துருப்புச் சீட்டாகஇருப்பார். பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சுதான் ராஜஸ்தான் அணி்க்கு சிரமத்தை கொடுக்கும் பந்துவீச்சில் அவர் வெளிப்படுத்தும் வேரியேஷன் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்க வைத்துவிடும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மைதானம் ஒத்துழைத்தால் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ராஜஸ்தான் அணியில் சஹல், அஸ்வின் என வலுவான போட்டியாக இருக்கும்
இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியைவிட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் பந்துவீச்சு, பேட்டிங்கில் வலுவாக இருப்பதால், அந்த அணி வெல்லவே வாய்ப்பு அதிகம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.