#TokyoOlympics பாக்ஸிங்: கொலம்பியா வீராங்கனையிடம் தோற்று காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய மேரி கோம்

By karthikeyan VFirst Published Jul 29, 2021, 4:20 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியா வீராங்கனை இங்க்ரிட் வாலன்ஸியாவிடம் தோல்வியடைந்தார் இந்தியாவின் மேரி கோம்.
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம், இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.  மேலும், ஹாக்கியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணியும், பாக்ஸிங்கில் 91 கிலோ எடைப்பிரிவில் சதீஷ்குமாரும் காலிறுதிக்கு முன்னேறினர்.

மகளிர் பாக்ஸிங் ஃப்ளைவெயிட்(48-51 எடை) பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் மேரி கோம், டோமினிகா குடியரசை சேர்ந்த மிகுவெலினா ஹெர்னாண்டெஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருந்தார். 

இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கொலம்பியா வீராங்கனை இங்க்ரிட் வாலன்ஸியாவிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார் இந்தியாவின் மேரி கோம்.  இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறினார் மேரி கோம்.
 

click me!