முதல் ஓவரிலேயே வங்கதேசத்தை மிரட்டிய மலிங்கா.. ஓராண்டுக்கு பின் களமிறங்கி அசத்தல் பவுலிங்

By karthikeyan VFirst Published Sep 15, 2018, 5:23 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்து ஆடிவருகிறது. முதல் ஓவரிலேயே அந்த அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் மலிங்கா.
 

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்து ஆடிவருகிறது. முதல் ஓவரிலேயே அந்த அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் மலிங்கா.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். இலங்கை அணியில் ஓராண்டுக்கு பின் மீண்டும் களமிறங்கிய லசித் மலிங்கா முதல் ஓவரை வீசினார்.

முதல் ஓவரின் 5வது பந்தில் லிட்டன் தாஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் மலிங்கா. இதையடுத்து அந்த அணியின் அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான ஷாகிப் அல் ஹாசன் களமிறங்கினார். ஷாகிப் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவரை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் மலிங்கா. ஓராண்டுக்கு பின் இலங்கை அணியில் களமிறங்கிய மலிங்கா, முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

இதையடுத்து தமீம் இக்பாலுடன் முஷ்பிகூர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். இலங்கை பவுலர் லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் கையில் அடிபட்டதால் அவரும் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ரஹீமும் முகமது மிதுனும் ஆடிவருகின்றனர்.
 

click me!