மோதுறதுக்கு முன்னாடியே பாகிஸ்தானை தெறிக்கவிட்ட ரோஹித் சர்மா!!

By karthikeyan VFirst Published Sep 15, 2018, 2:37 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் ஆடும் ஒவ்வொரு போட்டியுமே கடினமாக இருக்கும். அதனால் ஒவ்வொரு போட்டியிலும் கவனமாக வெற்றி பெறும் நோக்குடன் ஆடும் முனைப்பில் உள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
 

ஆசிய கோப்பை தொடரில் ஆடும் ஒவ்வொரு போட்டியுமே கடினமாக இருக்கும். அதனால் ஒவ்வொரு போட்டியிலும் கவனமாக வெற்றி பெறும் நோக்குடன் ஆடும் முனைப்பில் உள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 19ம் தேதி நடக்கிறது. அதற்கு முதல்நாள், இந்திய அணி ஹாங்காங்குடன் மோதுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஓராண்டுக்கு பிறகு மோத உள்ளதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் திடீரென ஆச்சரியங்களை நிகழ்த்தும் ரோஹித் சர்மா, அதிரடி வீரர் ராகுல், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், தோனி ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

இன்று ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஆறு அணிகளின் கேப்டன்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரோஹித் சர்மா, அனைத்து அணிகளின் கவனமும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையின் மீதே உள்ளது. எனவே இந்த தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமையும். ஏனென்றால் ஆஞ்சலோ மேத்யூஸ்(இலங்கை கேப்டன்), சர்ஃப்ராஸ் அகமது(பாகிஸ்தான் கேப்டன்), மோர்டஸா(வங்கதேச கேப்டன்) ஆகியோர் என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கின்றனர், என்ன உத்திகளை பயன்படுத்த போகின்றனர் என்பதை அறிந்துகொள்ள இந்த தொடர் உதவும்.

உலக கோப்பைக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அதற்கு முன் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் உலக கோப்பையில் ஆடும் அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியுமே கடினமானதாக இருக்கும். எனவே குறிப்பிட்ட ஒரு போட்டியில்(பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி) மட்டும் கவனம் செலுத்தாமல் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என ரோஹித் தெரிவித்தார். 

ரோஹித் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டு, அந்த அணிக்கான சீனை நாமே உயர்த்திவிடாமல் இருந்தது நல்ல விஷயம் தான். 
 

click me!