உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டை பிரேக்கரில் சென்னை வீரர் ஆர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற பகுதியில் உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்தது. கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய 10 ஆவது உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. அதுவும், 2 சுற்றுகளாக நடந்த இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், 5 முறை சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் சென்னையைச் சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா இருவரும் மோதினர். இந்த இறுதிப் போட்டியான 2 சுற்றுகளாக நடந்தது. இதில், 2 சுற்று போட்டியும் டிராவில் முடிந்தது.
இன்போசிஸ் விளம்பரத் தூதராக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஒப்பந்தம்!
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நடந்தது. இதில், முதல் டை பிரெக்கர் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த 2ஆவது டை பிரேக்கர் சுற்றானது டிராவில் முடியவே, மேக்னஸ் கார்ல்சன் முதல் முறையாக உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு முதல் முறையாக இறுதிப் போட்டி வரை வந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, சாம்பியனான கார்ல்சனுக்கு ரூ. 90,93,551 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து 2ஆவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு ரூ. 66,13,444 பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மேக்னஸ் கடந்த 2013, 2014, 2016, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார். முதல் முறையாக ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரை கைப்பற்றி கார்ல்சன் சாதனை படைத்துள்ளார்.
தோனியின் சிக்ஸரை மட்டுமே பேசுகிறார்கள், மற்ற வீரர்கள் விளையாடவில்லையா? கௌதம் காம்பீர் விமர்சனம்!