அது ஒண்ணுதான் எனக்கு பெரிய குறையா தெரியுது!! இந்திய அணி குறித்து கும்ப்ளே கவலை

By karthikeyan VFirst Published Jan 11, 2019, 10:52 AM IST
Highlights

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி(நாளை) தொடங்குகிறது. ஜனவரி 12, 15, 18 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனானது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி(நாளை) தொடங்குகிறது. ஜனவரி 12, 15, 18 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. 

முதல் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆஸ்திரேலிய அணியும் வீரர்களை அறிவித்துவிட்டது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி வலுவிழந்த அணியாக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் ஃபின்ச் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். மேலும் சில புதிய வீரர்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்துள்ளது. 

அதேநேரத்தில் இந்திய அணி அனுபவம் வாய்ந்த வீரர்களை உள்ளடக்கிய அணியாக உள்ளது. எனினும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே, இந்திய அணி குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய கும்ப்ளே, ஆஸ்திரேலிய அணி பலவீனமாகத்தான் உள்ளது. அந்த அணியில் எப்போதும் ஆடும் பவுலர்கள் கூட இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை. அந்த அணி பலவீனமாக இருக்கும் அதேநேரத்தில் இந்திய அணியை நினைத்து தைரியமாக இருக்க முடியவில்லை. 7 முதல் 8 வீரர்கள் சமீபத்தில் எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாமல் நேரடியாக ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்குகின்றனர். தொடர்ந்து டச்சில் இல்லாமல் நேரடியாக ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் களமிறங்குவதுதான் எனக்கு பிரச்னையாக படுகிறது என்று கும்ப்ளே தெரிவித்தார். 

தோனி, அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இதில்தான் ஆடுகின்றனர். இதுகுறித்த வேதனையைத்தான் கும்ப்ளே பதிவு செய்துள்ளார். 

click me!