தோனி இல்லாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது!! தெறிக்கவிட்ட முன்னாள், இந்நாள் வீரர்கள்

Published : Jan 10, 2019, 05:08 PM IST
தோனி இல்லாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது!! தெறிக்கவிட்ட முன்னாள், இந்நாள் வீரர்கள்

சுருக்கம்

ஐபிஎல்லில் அசத்திய தோனி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். அதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தோனி கண்டிப்பாக உலக கோப்பையில் ஆடுவார் என்றாலும் அவர் மீதான விமர்சனங்களும் அணியில் அவருக்கான இடம் குறித்த பேச்சுகளும் பரவலாக உள்ளன.  

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். 

அண்மைக்காலமாக சரியாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார் தோனி. ஐபிஎல்லில் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு தலைமையேற்று வழிநடத்திய தோனி, சிறப்பாக கேப்டன்சி செய்து மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை கைப்பற்றி கொடுத்ததோடு, பேட்டிங்கும் சிறப்பாக ஆடினார். 16 போட்டிகளில் பேட்டிங் ஆடி 455 ரன்களை குவித்தார்.

ஐபிஎல்லில் அசத்திய தோனி, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். அதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தோனி கண்டிப்பாக உலக கோப்பையில் ஆடுவார் என்றாலும் அவர் மீதான விமர்சனங்களும் அணியில் அவருக்கான இடம் குறித்த பேச்சுகளும் பரவலாக உள்ளன.

கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கடந்து இந்திய அணியில் தோனி அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பதற்கு காரணம், அவரது அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் செயல்பாடுதான். எப்போது வேண்டுமானாலும் பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பலாம். ஆனால் அவரது அனுபவம் ஒவ்வொரு போட்டிக்கும் தேவை. கேப்டனுக்கு ஆலோசனை, பவுலர்களுக்கு அறிவுரை என தோனியின் அனுபவம் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுகிறது. 

சீனியர் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் என்ற முறையில் தனது அனுபவத்தின் வாயிலாக அவர் வழங்கும் ஆலோசனைகள், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் நின்றுகொண்டு அனைத்து பவுலர்களின் திறமை மற்றும் பலகீனம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, அதற்கேற்றபடி அவரவர்க்கு தேவையான ஆலோசனைகளை தோனி வழங்குவார். தோனியின் ஆலோசனை நல்ல பலனளிக்கும். 

எனவே தோனிக்கு இருக்கும் எதிர்ப்பைவிட அவரது அனுபவமான அறிவுரைகள் மற்றும் விக்கெட் கீப்பிங் உலக கோப்பை வரை தேவை என்ற தோனிக்கு ஆதரவான குரல்கள்தான் வலுவாக உள்ளன. தோனி உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடவேண்டும் என்று அவருக்கு ஆதரவாக கவாஸ்கர், கங்குலி ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தோனியின் முக்கியத்துவம் குறித்து பேசிய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், எப்படி மற்றும் எந்த இடத்தில் பந்துவீச வேண்டும் என்று ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு தோனி வழிநடத்துவார். அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங் நிறுத்துவதில் கேப்டன் கோலிக்கு பயனுள்ள பல ஆலோசனைகளை வழங்குவார். தோனியின் இந்த ஆலோசனைகள் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுடுத்தும். அவரது அனுபவம் இந்திய அணிக்கு தேவை. இதுவரையிலான இந்திய அணியின் கேப்டன்களில் வெற்றிகரமான கேப்டன் அவர் என்று அசாருதீன் புகழாரம் சூட்டியுள்ளார். 

அதேபோல் தோனியின் முக்கியத்தும் குறித்து பேசிய இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, அணியில் தோனியின் இருப்பு எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவரது நிதானம் ஒட்டுமொத்த அணியையே நிதானமாக செயல்பட வைக்கும். இந்திய அணியை நீண்டகாலமாக வழிநடத்தியுள்ளார். வெற்றிகரமான கேப்டன் தோனி. அவரது இருப்பு அணிக்கு அவசியம் என ரோஹித் சர்மா கூறியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!