
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கோல்கட்டா அணிக்கும் இடையே நடைபெற்ற ஐ.பி.எல்., லீக் போட்டியில் சொதப்பிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. சாதனைத் தமிழன் தினேஷ் கார்த்திக்தலைமையிலான கேகேஆர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடைப்ற்று வருகிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கோல்கட்டா அணியில் ராணாவுக்குப்பதில் ரின்கு சிங் வாய்ப்பு பெற்றார்.
சென்னை அணிக்கு வாட்சன் (36), டுபிளசி (27) சிறப்பான துவக்கம் தந்தனர். குல்தீப் பந்தில் ரெய்னா (31) ஆட்டமிழந்தார். நரைன் 'சுழலில்' ராயுடு (21) சிக்கினார். கேப்டன் தோனி தனி வீரராக அசத்தினார்.
மாவி, ஜான்சன் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஜடேஜா 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. தோனி 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் அதிகபட்சமாக சாவ்லா, நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
எட்டி விடும் இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். ஆசிப் பந்தில் உத்தப்பா (6) அவுட்டானார். அதிரடி காட்டிய நரைன் 20 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன் 'சுழலில்' ரின்கு (16) சிக்கினார். ஆசிப் பந்துவீச்சில் இரண்டு சிக்சர் விளாசிய சுப்மன் அரை சதம் கடந்தார்.
இவருக்கு கைகொடுத்த கேப்டன் தினேஷ் கார்த்திக், ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், வெற்றி எளிதானது. கோல்கட்டா அணி 17.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் (57), தினேஷ் கார்த்திக் (45) அவுட்டாகாமல் இருந்தனர்.
இதையடுத்து வெற்றிப் பட்டியலில் இது வரை முதல் இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தற்போது இரண்டாவது இடத்துக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.