
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக டிவில்லியர்ஸ் ஆடிய இன்னிங்சைப் போன்று ஒரு ஆட்டத்தை இனி எஞ்சியுள்ள தனது கிரிக்கெட் வாழ்வில் ஆடுவதற்கான வாய்ப்பில்லை என கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டுவருகிறார்.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை ஆடியுள்ள 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றால், கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுவிடும்.
இந்நிலையில், சென்னை அணியை கொல்கத்தா அணி இன்று எதிர்கொள்கிறது. ஏற்கனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது. இன்றைய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்கிடையே ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக்கிடம், டெல்லி அணிக்கு எதிராக டிவில்லியர்ஸ் ஆடிய அதிரடி ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், டிவில்லியர்ஸ் ஆடிய அந்த இன்னிங்சை பார்த்தேன். அவரைப்போன்று ஒருநாள் ஆடவேண்டும் என்று உண்மையாகவே எனக்கு ஒரு விருப்பம் உண்டு. ஆனால் என்னுடைய புதிய மற்றும் குறுகிய வாழ்க்கையில் அது நடக்காது என்றே கருதுகிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
டெல்லிக்கு எதிரான அந்த போட்டியில், அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் வெறும் 39 பந்துகளுக்கு 90 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.