”ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம்”.. தோல்விக்கு கோலி சொன்ன காரணத்த பாருங்க

First Published Apr 30, 2018, 10:23 AM IST
Highlights
kohli opinion about rcb failure against kolkata knight riders


தொடர் தோல்விகளிலிருந்து மீளும் முனைப்பில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அப்போதே, தாங்களும் டாஸ் வென்றிருந்தால், முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய இருந்ததாகவே கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்னின் அரைசதத்தால், பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, இந்த பிட்ச் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது. 175 ரன்கள் நல்ல ஸ்கோர் தான். ஆனால் எங்களது ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இப்படியான ஃபீல்டிங்கை வைத்துக்கொண்டு வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல. எஞ்சியிருக்கும் 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனிவரும் போட்டிகளில் எங்கள் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என கோலி தெரிவித்தார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கோலியின் மோசமான கேப்டன்சியால் தோற்ற பெங்களூரு அணி, நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் இல்லாததால் பெரிய ரன்னை எடுக்க முடியாததாலும் மோசமான ஃபீல்டிங்காலும் தோல்வியை தழுவியது. இந்நிலையில், பிட்ச் ஆச்சரியத்தை தருவதாக கோலி கூறியிருப்பது, ஆட தெரியாதவன் தெரு கோணல்னு சொன்ன கதையாக இருக்கிறது. 
 

click me!