அந்த சம்பவம் மட்டும் நடக்கலைனா நாங்கதான் வின்னர்ஸ்!! கோலி எதை சொல்றாரு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Nov 22, 2018, 1:14 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக்வொர்த் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டக்வொர்த் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஃபின்ச் மற்றும் ஷார்ட் திணறினாலும் பின்னர் களத்திற்கு வந்த கிறிஸ் லின், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகிய மூவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். லின் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் தலா 4 சிக்ஸர்களை விளாசினர். ஸ்டோய்னிஸும் தன் பங்கிற்கு அடித்து ஆடினார். போட்டியின் குறுக்கே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் 153 ரன்களை குவித்தது. 

இந்திய அணி பவுலிங்கில் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிலும் சொதப்பியது. கோலி கேட்ச்சை தவறவிட்டார், ராகுல் ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டார், தன் பங்கிற்கு கலீல் அகமதுவும் ஒரு கேட்ச்சை விட்டார். இப்படியாக ஃபீல்டிங்கில் இந்திய அணி படுமோசமாக சொதப்பியது. 

ஆஸ்திரேலிய அணி 158 ரன்கள் குவித்த நிலையில், டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவருக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விரட்டிய இந்திய அணியின் ரோஹித் சர்மா(7), கோலி(4) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். ராகுலும் 13 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் தவான் மட்டும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி பவுண்டரிகளாக விளாசிய தவான் 42 பந்துகளில் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

தவான் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை கையில் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடி வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து ரிஷப் பண்ட்டும் அதிரடியாக ஆடினார். ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 23 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி ஆடியபோது இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது, அனைவரும் நம்பிக்கையிலும் இருந்தனர். ஆனால் ரிஷப் பண்ட் 20 ரன்களில் வெளியேற ஆட்டம் மீண்டும் கைமாறியது. கடைசி நேரத்தில் குருணல் பாண்டியா சொதப்ப மொத்த நெருக்கடியும் தினேஷ் கார்த்திக்கிற்கு சென்றதால் வேறு வழியின்றி இக்கட்டான சூழலில் தூக்கி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் அவரும் தூக்கியடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதையடுத்து போட்டி முடிந்ததும் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடக்கம் நன்றாக அமைந்தது. ஆனால் நடு ஓவர்களில் சற்று தடுமாறினோம். பின்னர் தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பண்ட்டும் ஆடும்போது வெற்றி பெறும் நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் ரிஷப் ஆட்டமிழந்ததும் நிலை மீண்டும் மாறியது என்று கோலி தெரிவித்தார். 

தவான் குறித்து பேசிய கோலி, மிகவும் வலிமையான வீரர் தவான். ஆனாலும் இதுவரை டி20 போட்டிகளில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. ஆனாலும் அவரது ஆட்டம் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக அமையும் என தவானை கோலி புகழ்ந்து பேசினார். 
 

click me!